‘அடிச்சு துன்புறுத்தராரு’… PLAY BOY போலீஸ்காரரின் கள்ளக்காதல் விளையாட்டு ; இரு குழந்தைகளுடன் பரிதவிக்கும் மனைவி…!!
Author: Babu Lakshmanan22 August 2023, 2:45 pm
இரண்டு குழந்தைகள் மற்றும் மனைவியை ஏமாற்றி விட்டு கள்ளக்காதலி உடன் உல்லாசமாக இருந்து வரும் போலீஸ்காரர் மீது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க பெண் புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கரூர் மாவட்டம் தெற்கு காந்தி கிராமம் பகுதியில் வசித்து வரும் லதா (32). இவர் சரவணன் (33) என்பவரை காதலித்து வந்தனர். கடந்த 2012ம் ஆண்டு பெண்ணின் தாயார் ஒப்புதலுடன் கரூர் தான்தோன்றி மலையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
இருவரும் சந்தோஷமாக வாழ்ந்த நிலையில், கடந்த 2014ம் ஆண்டு காவல்துறையில் வேலை கிடைத்தது. காவலர் பயிற்சி முடிந்து, அவர் திருச்சியில் உள்ள ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வந்தார். திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் ஆயுதப்படை காவலராக பணிபுரிந்த போது, அருகில் உள்ள அம்மா உணவகத்தில் பணிபுரிந்து வந்த சுபாஷினி (45 ) என்பவருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது
.
அப்போது முதல் ஆறு வருட காலமாக லதா, சரவணன் தம்பதியினருக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. இது குறித்து பல்வேறு காவல்துறை அதிகாரிடம் புகார் அளித்து முறையாக நடவடிக்கை எடுக்காத நிலையில், கரூர் ஆயுதப்படையில் கடந்த 8 மாதங்களாக பணியாற்றி வருகிறார்.
தன்னை ஏமாற்றும் கணவர் ஒரு போலீஸ் என்பதால் காவல்துறை அதிகாரிகள் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதோடு, ஆதரவற்று நிற்கதியாய் நிற்கும் தன்னை மிரட்டி வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.
தனக்கும், தனது குழந்தைகளுக்கும் நியாயம் கிடைக்கவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை என பாதிக்கப்பட்ட பெண் லதா கதறியுள்ளார். நேற்று கூட தனது கணவர் கள்ளக்காதலி சுபாஷினி தூண்டுதலின் பேரில், குடிபோதையில் வந்து கன்னத்தில், அடித்ததில், ஏற்கனவே ஆறு மாதங்களாக வலது பகுதியில் உள்ள காது கேட்காத நிலையில், தற்போது இரண்டு காதுகளும் கேட்கவில்லை என தெரிவித்தார்.
தனது இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு சிரமப்பட்டு வரும் லதா தனக்கு நியாயம் கேட்டு கரூர் தான்தோன்றிமலை காவல் நிலையத்தில் கணவனை மீட்டுத் தரக்கோரி புகார் அளித்தார். வாழ்க்கையை சீரழித்த தனது கணவர் சரவணன் ஒரு போலீஸ் என்பதால் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியுள்ளனர். பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் நியாயம் கேட்டு இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் லதா புகார் அளித்துள்ளார்.
சந்தோசமாக இருந்த சரவணன் குடும்ப வாழ்வில் கள்ளக்காதல் என்ற சுனாமி புயல் வீசத் தொடங்கியது. இதனால், மகிழ்ச்சியாக இருந்த இவர்கள் குடும்பம் இன்று சின்னாபின்னமாக மாறிவிட்டது.
இதனிடையே, லதாவும், கணவரின் கள்ளக்காதலியான சுபாஷினியும் உரையாடிய ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது.