டேய்… டேய்… ஒரே ஒரு டைம்… கல்லூரி கழிவறையில் மாணவனுக்கு பாலியல் தொந்தரவு : வெளியான அதிர்ச்சி ஆடியோ

Author: Babu Lakshmanan
10 February 2022, 8:22 pm

கரூரில் கல்லூரி மாணவனுக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூரை அடுத்துள்ள ஆத்தூர் பகுதியில் ஒரு தனியார் பாலிடெக்னிக் நிர்வாகம் ஒன்று பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. அந்த பாலிடெக்னிக்கில் மாணவர்கள் மற்றும் மாணவிகள் பயின்று வரும் நிலையில், அங்குள்ள ஒரு மாணவரை அதே பாலிடெக்னிக் கல்லூரியின் ஆசிரியர் செக்ஸ் டார்ச்சர் செய்த சம்பவம் தற்போது தமிழக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் பாலிடெக்னிக் கல்லூரியானது கடந்த பல வருடங்களாக இயங்கி வரும் நிலையில், இந்த கல்லூரியின் மெக்கானிக்கல் டிப்பார்ட்மெண்ட்டில் லேப் டெக்னிஷியனாக பணியாற்றுபவர் மனோகரன். இவர், இதே துறையில் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் சிறுநீர் கழிக்க சென்ற போது, செக்ஸ் டார்ச்சர் செய்துள்ளார். அதற்கு அந்த மாணவர் வேண்டாம், வேண்டாம் என்று கூற, ஒரு நிமிடம் தான் என்று கூறி ஆசிரியர் செக்ஸ் டார்ச்சர் செய்துள்ளார்.

இந்த சம்பவத்தினை அடுத்து ஆண் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லையா ? என்று கூறி அந்த கல்லூரியின் மாணவர்கள் மற்றும் அந்த பகுதியினை சார்ந்த இளைஞர்கள் ஆகியோர் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கரூர் டூ ஈரோடு செல்லும் மாநில நெடுஞ்சாலையில் இந்த திடீர் சாலைமறியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் மற்றும் கரூர் நகர காவல்துறையினர் விரைந்து அப்பகுதிக்கு வந்து போராட்டத்தினை கைவிடக்கோரி பேச்சுவார்த்தைக்கு முற்பட்ட போது, தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு மாணவர் சமுதாயம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஏற்கனவே கல்லூரி மாணவிகள் அதிக அளவில் செக்ஸ் டார்ச்சருக்கு ஆளாகி வரும் நிலையில், ஆண் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லையா? என்று ஒட்டுமொத்த மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் மட்டுமல்லாமல், தமிழக அளவில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது

  • lokesh kanagaraj decided to take break from social media லோகேஷ் கனகராஜ் எடுத்த திடீர் முடிவு! என்ன சார் கடைசில இப்படி பண்ணிட்டீங்களே?