‘ஆடுகளம்’ படத்தைப் போல பிரமாண்ட மைதானம்.. அனுமதியின்றி சேவல் சண்டைக்கு ஏற்பாடு… பூலாவலசு கிராமத்தில் போலீசார் குவிப்பு

Author: Babu Lakshmanan
14 January 2023, 5:34 pm

உலகப் புகழ்பெற்ற பூலாவலசு கிராமத்தில் அனுமதியின்றி நடத்த இருந்த சேவல் சண்டை தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உலக புகழ்பெற்ற பூலாம்வலசு கிராமத்தில் அனுமதியின்றி சேவல் சண்டை நடத்த இருந்தது. சேவல் கால்களில் கத்தி கட்டுவதால் அசம்பாவிதங்கள் நடைபெறுவதாக தொடரப்பட்ட வழக்கு காரணமாக நீதிமன்ற தடையாணை உள்ளதால், அப்பகுதியில் தடுப்புகள் அமைத்து அரவக்குறிச்சி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பூலாம்வலசு கிராமத்திற்கு வரக்கூடிய வெளியூர் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன. கிராமத்திற்குள் அனுமதிக்கப்படும் உள்ளூர் வாகனங்களின் பதிவு எண்கள், பெயர், விலாசம் ஆகியவை பெற்றுக்கொண்ட பின்னர் உள்ளே அனுப்பி வைத்து வருகின்றனர்.

சேவல் சண்டை போட்டிகள் நடைபெறும் மைதானத்தில் நூற்றுக்கணக்கான பந்தல்கள் அமைக்கப்பட்டு குடிநீர், வாகன நிறுத்துமிடம், கடைகள் உள்ளிட்ட வசதிகள் தடபுடலாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனால், அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதியில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் வீடுகளில் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான நபர்கள் தங்கி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. சேவல் சண்டை போட்டியில் ஒரே நாளில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட சேவல்கள் பங்கேற்பது வழக்கம்.

நான்கு நாட்களில் ஒரு லட்சம் பார்வையாளர்கள் கலந்து கொள்வர். ஆனால், இந்த ஆண்டு நீதிமன்ற உத்தரவு காரணமாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், அப்பகுதிக்கு வரக்கூடிய நபர்களை திருப்பி அனுப்பி வைத்து வருகின்றனர்.

அதே நேரம் விழா கமிட்டியினர் சார்பாக மாவட்ட நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ