வேலைக்கு ஆட்களை ஏற்றிச் சென்ற வேனில் தீவிபத்து.. எலுக்கூடான வாகனம்… உயிர்தப்பிய 15 பேர்…!!

Author: Babu Lakshmanan
30 July 2022, 5:54 pm

கரூர் : கரூரில் டெக்ஸ்டைல் வேலைக்கு ஆட்களை ஏற்றி வந்த வேனில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், அதிர்ஷ்டவசமாக 15 பேர் உயிர் தப்பினர்.

கரூர் மாவட்டம் லாலாபேட்டையில் இருந்து 15 பேரை ஏற்றிக்கொண்டு திருச்சி டு கரூர் பைபாஸ் ரோட்டில் ஏமூர் பெட்ரோல் பங்க் அருகில் Maxi cab வேனில் சென்று கொண்டிருந்தனர். டெக்ஸ் பார்க்கிற்கு செல்லும் வழியில் என்ஜினில் ஏற்பட்ட பழுதின் காரணமாக, அந்த வேனில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

வாகன ஓட்டுநர் நந்தகுமார் வாகனத்தின் இன்ஜின் முன்பாக கரும்புகை புகை வந்ததை பார்த்து உடனடியாக வேனை நிறுத்தினார். இதனால், உயிர் சேதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. இந்த வாகனத்தில் வந்தவர்கள் அனைவரும் உடனடியாக கீழே இறங்கி விட்டதால், யாருக்கும் எந்த விதமான பாதிப்பும் இல்லை.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் வாகன முற்றிலுமாக எரிந்தது. மேலும் இச்சம்பவம் குறித்து வெள்ளியணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 793

    0

    0