ரூ.15 ஆயிரம் அப்பு… சலூன் கடையில் புகுந்து அசால்ட்டாக ஆட்டைய போட்ட பெண்.. வைரலாகும் சிசிடிவி காட்சி..!!

Author: Babu Lakshmanan
24 July 2023, 9:44 pm

கரூரில் சலூன் கடை ஒன்றில் கல்லாப் பெட்டியில் 15 ஆயிரம் ரொக்கத்தை திருடி சென்ற அடையாளம் தெரியாத பெண்மணியின் சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது.

கரூர் அடுத்த தொழில்பேட்டையை சேர்ந்தவர் கார்த்திக் முருகேசன் (29) மற்றும் கரூர் வையாபுரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுதா கணேஷ் (29). இவர்கள் இருவரும் சேர்ந்து பார்ட்னர்ஷிப் முறையில் கரூர் மாநகரப் பேருந்து நிலையம் அருகில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் தெருவில் BLON சலூன் என்ற அழகு நிலையம் நடத்தி வருகின்றனர்.

இந்த சலூன் கடையில் அழகு நிலையம் மற்றும் வரவேற்பரை என இரண்டு அறைகள் அமைந்துள்ளன. கடந்த 21ஆம் தேதி பிற்பகல் சுமார் 12.05 மணியளவில் அழகு நிலையத்தின் உள்பக்க அறையில் வாடிக்கையாளர்களுக்கு முடி திருத்துதல் மற்றும் அழகுப்படுத்தும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, முன்பக்க வரவேற்பறையில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, உள்ளே நுழைந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண்மணி ஒருவர் கல்லாப்பெட்டியில் இருந்த 15 ஆயிரம் ரொக்கத்தை அங்கிருந்து திருடி சென்றுள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் அழகு நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

சிசிடிவி கேமராவில் பதிவான அந்த காட்சிகளை கடை உரிமையாளர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். தற்போது அந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.

  • vijay famous dialogue what bro spoke by ajith in good bad ugly movie “வாட் ப்ரோ? இட்ஸ் வெரி ராங் ப்ரோ”… விஜய்யின் வசனத்தை பேசி சீண்டிப்பார்க்கும் அஜித்?