பள்ளியின் மாடியில் இருந்து 12ம் வகுப்பு மாணவி குதித்து தற்கொலை முயற்சி..? போலீசார் விசாரணை..!!

Author: Babu Lakshmanan
4 January 2024, 10:01 pm

கரூரில் மாநகராட்சி பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி மாடியில் இருந்து குதித்ததாக கூறப்படும் நிலையில், போலீசார் இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

கரூர் மாநகராட்சி பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையுள்ள இப்பள்ளியில் நூற்றுக் கணக்கான மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் வெண்ணைமலை பசுபதிபாளையத்தை சார்ந்த தம்பிராஜ், கெளசிகா தம்பதியினரின் மகள் கார்த்திகா என்ற மாணவி 12ம் வகுப்பு கம்யூட்டர் செயின்ஸ் படித்து வருகிறார்.

இவர் இன்று மதியம் உணவு இடைவேளைக்குப் பிறகு பள்ளியின் முதல் தளத்திலிருந்து குத்தித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அருகில் இருந்த ஆசிரியைகள் மாணவியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல் மாடியில் இருந்து வேப்பம் மரம் கிளைகளுக்கு இடையே குதித்ததால் தலை மற்றும் கால்களில் வலி இருப்பதாக சொல்லப்படுகிறது.

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், கரூர் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Selvaraghavan Viral Video உதவி ஏன் கேக்குறீங்க..அத முதல்ல நிறுத்துங்க..யாரை தாக்குகிறார் இயக்குனர் செல்வராகவன்.!