மதுபோதையில் சாலையில் வாந்தி, மயக்கத்துடன் பள்ளி மாணவிகள் ; பத்திரமாக மீட்டு அறிவுரை கூறி அனுப்பி வைத்த போலீசார்..!!

Author: Babu Lakshmanan
11 August 2022, 1:22 pm
Quick Share

கரூரில் அரசுப் பள்ளி சீருடையில் மது போதையில் சாலையின் ஓரத்தில் அமர்ந்திருந்த பள்ளி மாணவிகள் – அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மீட்டு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.

கரூரில் உள்ள அரசுப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்த 3 மாணவிகள் கடந்த ஏப்ரல் முதல் நடந்த பொது தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து, இன்று அவர்களுக்கான சிறப்பு தேர்வு நடைபெற்ற நிலையில், 3 மாணவிகளும் பசுபதிபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் சிறப்பு தேர்வை எழுதி விட்டு வெளியில் வந்துள்ளனர்.

அதில் ஒரு மாணவியின் ஆண் நண்பர் அவர்களுக்கு ஒயின் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. அவற்றை குடித்த மாணவிகளில் ஒருவர் அங்கிருந்து வீட்டிற்கு சென்று விட மற்ற 2 மாணவிகள் பசுபதிபாளையம் பகுதியில் பேருந்தில் ஏறி சர்ச் கார்னர் வந்துள்ளனர். அங்கு வாந்தி எடுத்தும், பாதி மயக்க நிலையில் சாலை ஓரத்தில் அமர்ந்திருந்துள்ளனர்.

இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் 100 என்ற போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மாணவிகளை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். மாணவிகளின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதுடன், அவர்களை வரவழைத்து பெற்றோர்களுக்கும், மாணவிகளுக்கும் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • kanguva Day 2 Boxoffice Prediction Beat indian 2 and Vettaiyan கங்குவா பாக்ஸ் ஆபிஸ்: 2ஆம் நாள் வசூல் கணிப்பு
  • Views: - 516

    0

    0