நோட்புக்கில் கொரியா மொழி… மாயமான 3 அரசுப் பள்ளி மாணவிகள்… போலீசாருக்கு கிடைத்த துப்பு ; வைரலாகும் சிசிடிவி காட்சி!!

Author: Babu Lakshmanan
6 January 2024, 12:26 pm

கரூரில் அரசு பள்ளி மாணவிகள் மூன்று பேர் மாயமான நிலையில், அவர்கள் ரயில் நிலையத்தில் நடந்து சென்ற வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கரூர் அடுத்த ராயனூர் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்த மூன்று மாணவிகள் நேற்று காலை வீட்டில் இருந்து வழக்கம்போல் பள்ளிக்கு புறப்பட்டுள்ளனர். ஆனால், பள்ளிக்கு செல்லாத மாணவிகள், பள்ளி அருகே சென்று மூன்று மாணவிகள் ஒன்று கூடி வெளியே சென்று மாயமாகினர்.

மூன்று மாணவிகளும் பள்ளிக்கு வராததால் பள்ளி ஆசிரியர்கள் பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களின் இடங்களில் தேடியுள்ளனர். நீண்ட நேரம் தேடியும் மாணவிகள் கிடைக்காத காரணத்தால், தாந்தோணிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து இரண்டு தனிப்படைகள் அமைத்து தேடி வந்த நிலையில், முதற்கட்ட விசாரணையில் பேருந்து மூலம் மாணவிகள் பயணம் தெரிய வந்துள்ளது. தற்போது அந்த மூன்று சிறுமிகளும் கரூர் ரயில் நிலையத்தில் முகத்தில் மாஸ் அணிந்து பேக் எடுத்து செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

குறிப்பாக காணாமல் போன மூன்று சிறுமிகளின் நோட்டுப் புத்தகங்களில் கொரியா மொழியால் எழுதப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது.

  • vijay famous dialogue what bro spoke by ajith in good bad ugly movie “வாட் ப்ரோ? இட்ஸ் வெரி ராங் ப்ரோ”… விஜய்யின் வசனத்தை பேசி சீண்டிப்பார்க்கும் அஜித்?