750 கிலோ காய்கறிகள், பழங்களால் கரூர் கற்பக விநாயகருக்கு அலங்காரம் : தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு ஏற்பாடு..!!
Author: Babu Lakshmanan14 April 2022, 11:10 am
கரூர் : சித்திரை தமிழ் புத்தாண்டையொட்டி கரூர் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகருக்கு 750 கிலோ காய்கறிகள் மற்றும் பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டது.
கரூர் சின்ன அண்டன் கோவில் ரோடு அருகே உள்ள அண்ணா சாலையில் அமைந்திருக்கும் அருள்மிகு கற்பக விநாயகர் ஆலயத்தில், தமிழ் புத்தாண்டான சித்திரை 1 புத்தாண்டு மற்றும் மலையாள புத்தாண்டான விசு பிறப்பு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
குரு பெயர்ச்சி மற்றும் புத்தாண்டு ஆகிய நிகழ்ச்சியை ஒட்டி, 750 கிலோ காய்கறிகள் மற்றும் பழங்களால் மூலவர் கற்பக விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களை அலங்கரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு சுவாமிகள் அருள்பாலித்தனர்.

முன்னதாக கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு குருபகவான் தேர்ச்சி அடைந்ததால் குரு பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தமிழ் வருடப்பிறப்பு அன்று குரு பெயர்ச்சி நிகழ்ச்சியும் வருவது அபூர்வம் என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
மேலும், மூலவர் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்கள் காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.