கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி கரூர் நகர் காவல் நிலையம் அருகே திருநங்கை ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூரில் உள்ள அரசு காலனி பகுதியில் வசிப்பவர் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த தாட்சாயினி. திருநங்கையான இவர், கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு திருச்சியைச் சார்ந்த சந்தோஷ் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன்பு அவரது இருசக்கர வாகனத்தை சர்வீஸ் செய்து விட்டு வருவதாக சொல்லிவிட்டு சென்ற சந்தோஷ் குமார்,, இன்று வரை வீடு வரவிடாமல் அவர்கள் குடும்பத்தினர் தடுத்து வருகின்றனர்.
இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் நடவடிக்கை எடுக்காத நிலையில், எனது கணவரை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என கடந்த வாரம் திங்கட்கிழமை மக்கள் குறைதீர் நாளன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
இந்நிலையில், எந்தவித நடவடிக்கையும் இல்லாத காரணத்தால் இன்று திடீரென கரூர் நகர காவல் நிலையம் அருகே விஷம் அருந்தும் வீடியோவை வெளியிட்டு விட்டு காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தாட்சாயணி விஷம் அருந்தியது அறிந்த காவலர்கள், உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் தாட்சாயினியை கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தாட்சாயனிடம் விசாரித்த போது, காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்றால் மூன்றாம் பாலினத்தவர் என அவமானப்படுத்துவதாக தெரிவித்தார்.
தான் விஷம் அருந்தியதாக கூறிவிட்டு தனக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென கண்ணீர் மலர் கூறினார். இச்சம்பவம் குறித்து கரூர் நகர காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
கோவையில் பல்வேறு கடைகளில் வீட்டிற்கு உள்ளே வளர்க்கும் செடிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த வகை செடிகள் சின்கோனியம் ஸ்நேக் பிளான்ட்…
இந்திய இசையமைப்பாளர்களின் அதிக சம்பளம் வாங்கும் பிரபலமாக இருப்பவர் அனிருத்தான். இவர் இசையமைக்கும் அத்தனை ஆல்பமுமே ஹிட் ஆவதால் தயாரிப்பாளர்கள்…
வித்தியாசமான கதைக்களம் சிவகார்த்திகேயனின் நடிப்பில் மடோன்னே அஸ்வின் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான “மாவீரன்” திரைப்படம் சிவகார்த்திகேயனின்…
பிக் பாஸ் பிரபலம் தர்ஷன் கைது செய்யப்பட்டது சென்னையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நேற்று மாலை ஜிம்மில் இருந்து திரும்பிய…
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள மேட்டு இருங்களூரை சேர்ந்த துரைசேகர் என்பவரது மகன் 25 வயதுடைய ஜெகன். பி.காம்…
This website uses cookies.