பள்ளி மாணவிகளை கேலி செய்து கொலை மிரட்டல் : மாணவன் உட்பட இருவர் போக்சோவில் கைது

Author: kavin kumar
11 February 2022, 7:51 pm

கரூர் : குளித்தலை அருகே பள்ளி மாணவிகளை கேலி கிண்டல் செய்த இருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நங்கவரம் பகுதியைச் சேர்ந்த மாணவிகள் அப்பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் படிக்கும் 3 மாணவிகள் சைக்கிளில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது கம்பளியம்பட்டியைச் சேர்ந்த வினோத் குமார் மற்றும் இனுங்கூரைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவர் ஆகிய இருவரும் டாட்டா ஏசி வண்டியில் வெங்காயம் விற்பனை செய்து வந்தனர். இவர்கள் வாகனத்தை நிறுத்தி மாணவிகளின் முடியைப் பிடித்து இழுத்தும், தொந்தரவு செய்ததோடு,

இதை வெளியே கூறினால் வண்டியை விட்டு ஏற்றி கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். இதையடுத்து மாணவிகள் பெற்றோர்களிடம் கூறியதைத் தொடர்ந்து பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் இருவரையும் பிடித்து குளித்தலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து மாணவிகளின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் குளித்தலை காவல் உதவி ஆய்வாளர் ரூபிணி இருவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ வழக்குப்பதிவு செய்து குளித்தலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!