கரூரில் எந்தெந்த பேரூராட்சிகள், நகராட்சிகளில் யார் யார் வெற்றி தெரியுமா..? விறு விறு வாக்கு எண்ணிக்கை!!
Author: Babu Lakshmanan22 February 2022, 2:37 pm
கரூர் மாவட்டத்தில் ஏழு பேரூராட்சிகள் மற்றும் ஒரு நகராட்சி வாக்கு எண்ணிக்கை முடிந்தது. கரூர் மாநகராட்சி மற்றும் புகலூர் பள்ளப்பட்டி நகராட்சிகளும், புலியூர் பேரூராட்சி வாக்கு எண்ணிக்கை மட்டும் நடந்து வருகின்றது.
கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர் மாநகராட்சி, குளித்தலை, புகலூர், பள்ளப்பட்டி ஆகிய மூன்று நகராட்சிகள், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், பூஞ்சை தோட்டக்குறிச்சி உள்ளிட்ட 8 பேரூராட்சிகளில், குளித்தலை நகராட்சி திமுக கைப்பற்றியது. குளித்தலை நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில், 20 வார்டுகளை திமுக கட்சியும், 1 வார்டு அதிமுகவும், மதிமுக ஒரு இடம் மற்றும் சுயேச்சைகள் இருவரும் கைப்பற்றியுள்ளனர்.
உப்பிடமங்கலம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 இடத்தில் 14 இடத்தை திமுக கைப்பற்றியது, 1 இடத்தை சுயச்சை கைப்பற்றி உள்ளது. உப்பிடமங்கலம் பேரூராட்சியில் 15 வார்டுகளில், 14-வார்டு கடை திமுக கைப்பற்றி, 1 வார்டினை சுயட்சை கைப்பற்றி உள்ளது. அரவக்குறிச்சி பேரூராட்சியில் 15 வார்டுகளில், 10 வார்டுகளை திமுக கைப்பற்றி உள்ளது. 2-வார்டுகளை அதிமுக மற்றும் ஒரு வார்டினை காங்கிரஸ் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்று கைப்பற்றியுள்ளது.
நங்கவரம் பேரூராட்சியில் 18 வார்டுகளில் 15 வார்டுகளை திமுக கைப்பற்றி உள்ளது ஒரு வார்டினை அதிமுகவும் சுயேச்சைகள் இரண்டு நபர்கள் கைப்பற்றியுள்ளனர். இதேபோல புலியூர் பேரூராட்சி மற்றும் நகராட்சி பள்ளப்பட்டி நகராட்சி கரூர் மாநகராட்சிகள் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றன.