அட, இதுக்கெல்லாமா கொலை மிரட்டல்…? பேருந்து ஓட்டுநர், நடத்துநருக்கு மிரட்டல் விடுத்த பைக்கில் சென்ற இளைஞர்களுக்கு நேர்ந்த கதி..!

Author: Babu Lakshmanan
15 August 2022, 1:59 pm

கரூரில் அரசு பேருந்திற்கு வழி விடாமல் இரு சக்கர வாகனத்தை ஓட்டிய 2 இளைஞர்களை தட்டிக் கேட்ட நடத்துனர், ஓட்டுநர், பயணிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார்.

கோவையிலிருந்து திருச்சி நோக்கி அரசுப் பேருந்து ஒன்று இன்று அதிகாலை 2.30 மணியளவில் சென்று கொண்டிருந்தது. கரூர் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட அந்தப் பேருந்து லைட்ஹவுஸ் கார்னர், திருமாநிலையூர், தெரசா கார்னர் வழியாக சென்று கொண்டிருந்தது.

அப்போது பேருந்திற்கு முன்னாள் இரு சக்கர வாகனத்தில் சென்ற ராமானூரை சார்ந்த பிரபு, புதுக்கோட்டையை சார்ந்த பாக்கியராஜ் ஆகியோர் வழி விடாமல் சென்றுள்ளார். ஒரு கட்டத்தில் பேருந்தின் முன்பக்கம் இரு சக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக நடத்துனர் குமார், ஓட்டுநர், பயணிகள் ஆகியோர் இளைஞர்களிடம் ஏன் இப்படி வழி விடாமல் இருக்கிறீர்கள் என கேட்டதற்கு கெட்ட வார்த்தையால் திட்டி, தாக்கி, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததுடன், கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக தாந்தோன்றிமலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பிரபு, பாக்கியராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்ததுடன், அவர்கள் பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!