மதுரை ரயில் நிலையத்தில் ‘கருவாடு’ விற்பனை : அசத்தும் தெற்கு ரயில்வே… பொதுமக்கள் வரவேற்பு!!

Author: Babu Lakshmanan
13 February 2023, 10:11 am
Quick Share

இந்திய பிரதமரின் ஒன் ஸ்டேஷன் ஒன் ப்ராடக்ட் திட்டத்தின் கீழ் மதுரை ரயில் நிலையத்தில் உலர் மீன் விற்பனை கூடம் அமைக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ற பாரம்பரிய உணவு வகைகள் உற்பத்தி பொருட்களை ரயில் நிலையங்களில் விற்பனை செய்வதற்கு, இந்திய பிரதமரின் ஒன் ஸ்டேஷன் ஒன் ப்ராடக்ட் திட்டத்தின் கீழ் இந்திய ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

சுற்றுலா பயணிகளாக பல்வேறு மாநிலங்களுக்கு செல்லும் இந்திய மக்களுக்கு அந்தந்த பகுதிகளின் முக்கியத்துவம் குறித்து அறிந்து கொள்ள மற்றும் அப்பகுதி சார்ந்த பொருட்களை ரயில் நிலையத்திலேயே வாங்கிக் கொள்ள செய்யப்பட்டுள்ள இந்த ஏற்பாடு ரயில் பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அந்த அடிப்படையில் மதுரை ரயில் நிலையத்தில் மதுரைக்கே உரித்தான சுங்குடி சேலை விற்பனை கூடம் ஏற்கனவே இயங்கி வருகிறது. இந்நிலையில் தற்போது முதல் முறையாக இந்திய ரயில்வேயில் முதல்முறையாக மதுரை ரயில் நிலையத்தில் ‘லூமிரியன்ஸ் டிரை பிஷ் ஹட்’ என்னும் கருவாட்டு விற்பனை கூடம் இன்று துவங்கப்பட உள்ளது. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவர்கள் எளிதில் வாங்கிச் செல்லும் வண்ணம் ரூபாய் நூறிலிருந்து இந்த கருவாடுகள் விற்பனை செய்யப்பட உள்ளன.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மண்டபம் பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் தயார் செய்யப்பட்டு இந்த விற்பனை கூடத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Tamil OTT Release Today இன்னைக்கு ஓடிடில இத்தனை படம் ரிலீஸா? கங்குவாவை பதம் பார்க்கும் லிஸ்ட்.!!
  • Views: - 391

    0

    0