Kashmir Files படத்திற்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் : முதலமைச்சரிடம் சபாநாயகர் மற்றும் அமைச்சருடன் சென்று பாஜகவினர் மனு!!

Author: Babu Lakshmanan
21 March 2022, 5:18 pm

புதுச்சேரியில் காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்க கோரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்து சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் மனு அளித்தனர்.

புதுச்சேரியில் காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தினை கடந்த சில தினங்களுக்கு முன்பு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் படத்தை பார்த்தனர்.

இந்நிலையில், காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்திற்கு புதுச்சேரி அரசு வரிவிலக்கு அளிக்க கோரி புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன், சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர்.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 1319

    0

    0