அவருக்கு நான் அம்மாவா? கடுப்பான கஸ்தூரி : எந்த நடிகர்னு தெரியுமா?!
Author: Udayachandran RadhaKrishnan29 April 2025, 5:02 pm
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி.
திருமணத்திற்கு பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு கவர்ச்சியில் ஒரு ஐட்டம் சாங் ஆடியிருந்தார். பின்னர் கிடைத்த சிறு சிறு ரோல்களில் நடித்த அவர், சின்னத்திரைப் பக்கமும் காலடி எடுத்து வைத்தார்.
இந்த நிலையில் தான் பிரபல நடிகருக்கு அம்மாவாக நடிக்க வாய்ப்பு கிடைத்ததை மறுத்துள்ளார். பின்னர் கதையை சொனன்தும் ஓகே என கூறியுள்ளார்.

அந்த நடிகர் வேறு யாருமில்லை நடிகர் சந்தானம் தான். காமெடியில் கலக்கிய சந்தானம், இனிமே இப்படித்தான் என ஹீரோவாகவே நடித்து வருகிறார். இவரது நடிப்பில் டிடி நெக்ஸ்ட் லெவல் படம் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது.

மே 1ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது. இதில் சந்தானத்தின் தாயாக நடிகை கஸ்தூரி நடித்துள்ளார். முதலில் சந்தானத்துக்கு அம்மாவா எல்லாம் நடிக்க முடியாது என கூறிய அவர், முழுக் கதையை கேட்ட பின்பு நடிக்க ஒப்புக்கொண்டுள்ள செய்தி காட்டுத்தீ போல பரவுகிறது.
