கிரிக்கெட் வீரரின் உள்ளாடை குறித்து நடிகை கஸ்தூரி கருத்து.. வைரலாகும் ட்டுவிட்டர் பதிவு.!
Author: Rajesh30 May 2022, 8:09 pm
30 வருடங்களாக Industry-ல் இருக்கும் கஸ்தூரியின் முதல் படம் ஆத்தா உன் கோயிலிலே. அதன் பிறகு ஆத்மா, அமைதிப்படை, இந்தியன், தூங்கா நகரம், தமிழ்படம் உட்பட ஏராளமான படங்களில் நடித்தார். இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, கன்னடம், மலையாளம், மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
நடுவில் கொஞ்சம் Gap எடுத்துகொண்டு 2009 ஆம் ஆண்டில் அருண்விஜய் நடிப்பில் வெளியான மலை மலை படத்தின் மூலம் Re – Entry தந்தார். தற்போது கூட படங்களில் நடித்து வரும் இவர், சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகள் மற்றும் அரசியல் குறித்து, இவரின் சமூக வலைதள பக்கத்தில் தனது கருத்தை தெரிவிப்பதன் மூலம் இன்னும் பல மக்கள் மத்தியில் பிரபலம் ஆகி வருகிறார்.
உங்களுக்கு தெரியாதா இன்னொரு விஷயம் என்ன என்றால், மாநில அளவில் இவர் ஒரு Hockey வீராங்கனை ஆவார். நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான கஸ்தூரி சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார். அந்த வகையில் தற்போது, இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலின் விளம்பரத்தை விமர்சித்துள்ளார்.
அவர் பதிவிட்டுள்ள டிவிட்டரில், ‘ சிப்ஸ், கோலா விளம்பரங்களில் கிரிக்கெட் வீரர்கள் நடிக்கின்றனர். சிலர் உடை விளம்பரங்களில் நடித்துள்ளனர். ஆனால், உள்ளாடை விளம்பரங்களை பெரும்பாலும் தவிர்த்து வந்துள்ளனர். ஆனால் கே,எல்.ராகுல் இந்த உள்ளாடை விளம்பர போட்டோக்களில் சூப்பராக இருக்கிறார்’ என்பது போல ஆங்கிலத்தில் பதிவு செய்து ட்வீட் செய்துவிட்டார். இந்த டிவீட் தற்போது வைரலாக பரவி வருகிறது.
We see cricketers plug colas ,chips & online games. Many Indian sportsmen have endorsed clothing brands, but have shied away from undergarment labels.
— Kasturi Shankar (@KasthuriShankar) May 30, 2022
So it's nice to see @klrahul looking buff in boxers.
Hope this brings menswear out of the closet. Pun intended :)) #PostIPL_Post pic.twitter.com/MFA0Glc9kt