“ஆடம்பரமான விருந்து.. ஆனால் ஏனோ ருசிக்கவில்லை”.. PS 1-யை விமர்சித்த பிரபல நடிகையை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!
Author: Vignesh1 October 2022, 11:30 am
நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் மறைமுகமாக பொன்னியின் செல்வன் படத்தை சாடியுள்ளார். இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வசூல் வேட்டையை உலகம் முழுவதும் நடத்தி உள்ளது.
தமிழர்களின் பெருமை என ஒருபக்கம் கொண்டாடி வந்தாலும், ப்ளூ சட்டை மாறன், கஸ்தூரி போன்ற பிரபலங்கள் பொன்னியின் செல்வனுக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் கொடுத்துள்ளனர்.
60 கோடி வசூல் இந்தியா முழுவதும் முதல் நாளில் 35 கோடி வசூலையும் உலகம் முழுவதும் 25 கோடி வசூலையும் பெற்று முதல் நாளே பொன்னியின் செல்வன் திரைப்படம் 60 கோடிக்கும் அதிகமான வசூலை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
போர் காட்சி இல்லை பொன்னியின் செல்வன் படத்தில் பிரம்மாண்ட போர் காட்சிகள் எதுவும் இருக்காது. அரசியல் சதி விளையாட்டுத் தான் கதை. அதை முடிந்தவரை இயக்குநர் மணிரத்னம் திரைப்படமாக மாற்றி உள்ளார் என பொன்னியின் செல்வன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஆனால், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மற்ற மொழி ரசிகர்களுக்கு பாகுபலி படத்தை போல இந்த படம் இல்லை என்கிற குற்றச்சாட்டு உள்ளது. கழுவி ஊற்றிய ப்ளூ சட்டை மாறன் நானே வருவேன் படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனம் கொடுத்த ப்ளூ சட்டை மாறன் பொன்னியின் செல்வன் படத்திற்கு ஆரம்பத்தில் பாசிட்டிவ் விமர்சனம் கொடுப்பது போல பேசிவிட்டு, பின்னர் படம் படு மொக்கை என கழுவி கழுவி ஊற்றி உள்ளார். அவரது வீடியோவின் கமெண்ட்டுக்கு கீழ் ஏகப்பட்ட ரசிகர்கள் அவரை திட்டித் தீர்த்து கமெண்ட் போட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ப்ளூ சட்டை மாறனை தொடர்ந்து நடிகை கஸ்தூரியும் நெகட்டிவ் விமர்சனத்தை கொடுத்திருப்பது ரசிகர்களை மேலும் கடுப்பில் ஆழ்த்தி உள்ளது. எதிர்பார்த்த அளவுக்கு பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்னம் எடுக்கவில்லை என்றும் பாடல்களில் தமிழையே காணோம் என இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானையும் மறைமுகமாக சாடி உள்ளார்.
“ஆடம்பரமான விருந்து.. ரகரக உணவு.. ஆனால் ஏனோ ருசிக்கவில்லை.. ரசிக்க இயலவில்லை. ஆடம்பர இசை.. எத்தனையோ வாத்தியங்கள்.. ஒன்றில் கூட தமிழில்லை. அதனால் ஒட்ட முடியவில்லை. என பொன்னியின் செல்வன் படம் குறித்த தனது விமர்சனத்தை மறைமுகமாக பெயர் குறிப்பிடாமல் அவர் வெளியிட்டுள்ளார் என ரசிகர்கள் அவரையும் கமெண்ட் பக்கத்தில் திட்டித் தீர்த்து வருகின்றனர்.
சரித்திர நாயகியை மிஸ் பண்ணிட்டீங்களே “மணிரத்னம் சார் இந்த அம்மணிக்கும் ஏதாவது கதாபாத்திரத்தில் போட்டிருந்தால் இனித்திருக்கும்…தமிழை தூக்கிப் பிடித்திருக்கும். சரித்திர நாயகியை மிஸ் பண்ணிடீங்களே, என்னமா இப்படி பண்றீங்களே மா!!!” என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.