கச்சத்தீவு தொடர்பாக ஆர்டிஐ அண்ணாமலை பெற்றது விதிமீறல் என்று காங்கிரஸ் கட்சி மாநில செய்தி தொடர்பாளர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்ட காங்கிரஸ் அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் இன்று இந்திய காங்கிரஸ் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளரும், மண்டல பொறுப்பாளருமான வழக்கறிஞர் இப்ராஹிம் செய்தியாளர்களுக்கு அளித்தார்.
அப்போது, அவர் பேசியதாவது :- தற்போது காங்கிரஸ் கட்சியின் பணம் முடக்கப்பட்டுள்ளது. பாஜக மக்கள் விரோத அரசு காங்கிரஸ் மீதும் காங்கிரஸ் கட்சியின் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதும் இந்தியா கூட்டணியில் இருக்கும் தலைவர்கள் மீதும் தேவையற்ற விரோத போக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், காங்கிரஸ் கட்சியை முடக்க வேண்டும் என்ற நோக்கத்தில் குறியாக உள்ளது குறியாக உள்ளது.
நரேந்திர மோடியும், அமித்ஷாவும் இந்தியா கூட்டணியை வலுவடைய செய்யக்கூடாது. இது தங்களை பாதிக்கும் என கட்டாயத்தின் அடிப்படையில் செயல்படுகின்றனர். கடந்த ஏழு ஆண்டுகளில் 42 கோடி ரூபாயை 1297 பேர் நிதியாக வழங்கியுள்ளனர். 14 லட்ச ரூபாய்க்கு 132 கோடி வரிவிதித்தால், 42 கோடிக்கு 4600 கோடி ரூபாய் வரி விதிக்க வேண்டும். 4600 கோடி ரூபாய் வரி விதிக்க வேண்டும். ஏன் ஒருதலைபட்சமாக வருமான வரித்துறைவருமான வரித்துறை இடி, சிபிஐ இயங்குகிறது, எனக் கூறினார்.
கச்சத்தீவை காங்கிரஸின் திமுகவும் தான் தாரை வார்த்துள்ளது என அண்ணாமலை தெரிவித்துள்ளார் என்ற கேள்விக்கு, 1974ல் கருணாநிதியும், இந்திரா காந்தியும் கொடுக்கப்பட்டது அது. 1.9 சதுர கிலோமீட்டர். இன்று லடாக் பகுதியில் நாலாயிரம் சதுர கிலோமீட்டர் இந்திய மண் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே கச்சத்தீவு தொடர்பாக 2005மற்றும் 2015 இரண்டு முறை ஆர்டிஐ அப்ளை செய்துள்ளோம். அதற்கு ஆர்டிஐ வெளியுறவுத்துறை சம்பந்தமான தரவுகள் இதனை வெளியிட முடியாது என தெரிவித்தனர்.
எங்களுடைய கேள்வி இன்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவருக்கு எப்படி இந்த ஆர்ட்டியை கிடைத்தது. 2014, 16 ஆம் ஆண்டுகளில் ஜெயலலிதா இது குறித்து கேள்வி எழுப்பி உள்ளார். கடந்த பத்து வருடமாக பாஜக ஆட்சி தான் இருந்தது. இது குறித்து வாய் திறந்து பேசவில்லை ஏன்..?. அண்ணாமலைக்கும், இந்திய நாட்டு பிரதமருக்கும் ஒரு கேள்வி, ஆர்டிஐ மேட்டர் வராது என்று சொல்லிவிட்டு பாஜக மாநிலம் மற்றும் அண்ணாமலைக்கு மட்டும் ஆர்.டி எப்படி வழங்கப்பட்டது.
இது விதி விதிமீறல் தெரிந்துகொண்டு நரேந்திர மோடி எப்படி ஆதரவு தெரிவிக்கிறார். ஆர்டிஐ மூலமாக இந்த தகவல்களை கொடுத்தது தவறு. கச்சத்தீவைக் கொண்டு அரசியல் வாக்கு வங்கியை பெறலாம். தமிழக மக்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை தாக்கத்தை ஏற்படுத்தும் என ஒரு மனக்கணக்கை அரசியலாக பயன்படுத்துகின்றனர். ஆர்டியை அண்ணாமலை பெற்றது முழுக்க முழுக்க விதிமீறல். இதனை காங்கிரஸ் அடுத்த இடத்திற்கு கொண்டு போகும்.
கெஜ்ரிவால் கைது என்பது 75 ஆண்டு ஆட்சியில் பதவியிலுள்ள முதல்வரை விசாரணைக்காக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. 2014 முதல் 2024 வரை ஈடியால் 127 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 115 பேர் எதிர்க்கட்சித் தலைவர்கள் திட்டமிட்டு கைது செய்கின்றனர். அடுத்த வாரம் தமிழகத்திற்கு ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும் பிரச்சாரத்திற்கு வர உள்ளனர், எனக் கூறினார்.
பணம் இல்லை என்பதால் தேர்தலில் போட்டியிடவில்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராம் கூறியுள்ளார் என்ற கேள்விக்கு, ஆந்திர மாநிலத்தில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்ததற்காக அவர் படிவம் 26 தாக்கல் செய்கிறார். அதில் தனக்கு இரண்டு கோடி ரூபாய் சொத்து மதிப்பு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் தேர்தல் ஆணைய குறிப்பிட்டுள்ளபடி 90 லட்சம் இருந்தாலே தேர்தலில் போட்டியிடலாம். ஆனால் இந்தத் தொகையும் தாண்டி இரண்டு கோடியோ வைத்துள்ளார். ஆனால், இந்தத் தொகையும் தாண்டி இரண்டு கோடியோ வைத்துள்ளார். 8000 கோடி ரூபாய் தேர்தல் பாண்டு மூலம் பணத்தை பெற்றுள்ளனர் கட்சி ஏன் உதவாதா…? தமிழகத்தில் வந்து பிச்சைக்காரி என்று சொல்லி பிரச்சாரம் செய்ய முடியாது அதனால் அவர்கள் தேர்தலில் போட்டியிடவில்லை.
திருநாவுக்கரசர் வாக்கு அதிகமாக பெற்ற தலைவர் அவர் மீது எந்த கரையும் கிடையாது. அவரை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி ஒரு நிலைப்பாடு உள்ளது. இதைவிட நல்ல பதிவியை வழங்க உள்ளது. வெளியிட்டுள்ள கருத்து அது அவரை சார்ந்தது. தேர்தல் இடத்தில் பெட்ரோல் கேஸ் விலை குறைப்பது மக்கள் மத்தியில் ஆசையைக் காட்டி வாக்கு வங்கி பெற வேண்டும் என்பதுதான் பாஜகவின் அகில இந்திய தலைமை உடைய தெளிவான யுக்தி.
பாஜக தலைவர் அண்ணாமலை தன் கோட்டாவில் படிக்கவில்லை என தெரிவித்துள்ளார். அதில் சீட்டு கிடைக்கவில்லை என்று தெரிவித்திருந்தார். தான் ரிசர்வேஷன் மொழியாக்கம் தான் படைத்தேன் என்பதை சொல்லி இருக்கிறார். அதற்கான வீடியோ பதிவு இதுதான் திராவிட அரசியலை விரும்பாதவர் பாஜக தலைவர் அண்ணாமலை என தெரிவித்தார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.