ஒழுங்கா இருந்துக்கோ கொன்னே போடுவேன்.. கொலை மிரட்டல் விடுத்து பாஜகவுக்கு வந்த கடிதம்..!
Author: Vignesh15 August 2024, 1:36 pm
பழனியில் ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியத்துக்கு கொலை மிரட்டல் விடுத்து பா.ஜ.க அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பிய இருவரை போலிசார் கைது செய்யபட்ட சம்பவம் பரப்பபை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜ., திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் பழனியை சேர்ந்த கனகராஜ். இவரது பெயருக்கு பழனி இடும்பன் கோயில் ரோட்டில் உள்ள பா.ஜ.க அலுவலகத்திற்கு இரு தினங்களுக்கு முன் பெயரில்லாத கடிதம் வந்தது. அதில் ஹிந்து தலைவர்களை கொலை செய்ய கைசர் அலி, அவரது நண்பர் பாரூக் உள்ளிட்டோர் 10 பேர் கொண்ட குழுவுடன் ஆயுதப் பயிற்சி மேற்கொண்டு உள்ளனர்.
குறிப்பாக ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியத்தை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக மாவட்ட தலைவர் கனகராஜ் பழனி போலீசில் புகார் அளித்தார். சி.சி.டி.வி., காட்சிகள் உள்ளிட்டவை கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பழனியை சேர்ந்த கைது செய்யபட்ட அப்துல்வாஹித் க்கும், தேநீர் கடை உரிமையாளர் கைசர் அலிக்கும் இடையே தொழில் போட்டி இருந்துள்ளது.
கைசர் அலியை பழி வாங்க அப்துல் வாஹித், முகமது ஆசிக்பாபு 40, சேர்ந்து கடிதம் அனுப்பியது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.