செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகள் தீவிரம்… திடீரென வெளியான காவேரி மருத்துவமனையின் பரபரப்பு அறிக்கை!!

Author: Babu Lakshmanan
16 June 2023, 12:07 pm

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளது. கைது நடவடிக்கையின் போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால், அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

இதையடுத்து, மனைவியின் கோரிக்கையை ஏற்று, நீதிமன்றத்தின் அனுமதியின் பேரில், செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவருக்கு ஏழாவது மாடியில் ஸ்கை வியூ வார்டு எனும் தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அவரது வார்டை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதனிடையே, அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு 2 அல்லது 3 நாட்களில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும், செந்தில் பாலாஜியின் மனைவியின் விருப்பத்தின்பேரிலேயே காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடுகள் செய்து வருவதாக தெரிவித்தார்.

இந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்வது தொடர்பாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், கூடிய விரைவில் பைபாஸ் சிகிச்சை செய்ய ஏஆர் ரகுராம் குழு பரிந்துரைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • cooku with comali season 6 new judge chef koushik இனி இவர்தான் குக் வித் கோமாளி நடுவரா? வீடியோ வெளியிட்டு அதிரடி காட்டிய விஜய் டிவி!