துரத்தும் நாய்களை கண்டுக்காதீங்க..! மீ டூ விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தாரா வைரமுத்து.?

Author: Rajesh
26 April 2022, 2:14 pm

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் பல வெற்றிப் படங்களுக்கு பாடல்களை எழுதி கொடுத்தவர் தான் பாடலாசிரியர் வைரமுத்து. இயக்குனர் பாரதிராஜாவின் ‘நிழல்கள்’ படத்தின் மூலம் திரையுலகில் பாடலாசிரியராக அறிமுகம் ஆனார். ‘இது ஒரு பொன் மாலைப் பொழுது’ என்ற பாடலே அவர் திரையுலகில் இயற்றிய முதல் பாடலாகும்.

என் பழைய பனை ஓலைகள், வானம் தொட்டுவிடும் தூரம்தான், என் ஜன்னலின் வழியே, மெளனத்தின் சப்தங்கள், கல்வெட்டுக்கள், கொடிமரத்தின் வேர்கள், கருவாச்சி காவியம், பாற்கடல், மூன்றாம் உலகப்போர், தமிழாற்றுப்படை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நூல்களை இதுவரை படைத்துள்ளார்.

அவர் எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற நூல் 2003 ஆம் ஆண்டு ‘சாகித்ய அகாடமி’ விருது பெற்றது. இலக்கியத்தின் பங்களிப்பிற்காக இந்தியாவின் உயர்ந்த விருதுகளான ‘பத்மஸ்ரீ’ மற்றும் ‘பத்மபூஷண்’ விருதும், பாரதிய பாஷா பரிஷித் அமைப்பின் ‘சாதனா சம்மாண்’ விருதும் பெற்றிருக்கிறார்.

இதுவரை 7,000த்திற்கும் மேற்பட்ட பாடல்கள் இயற்றியிருக்கிறார். திரைப்படப் பாடலாசிரியருக்கென்று 7 முறை தேசிய விருது பெற்ற இந்தியாவின் ஒரே பாடலாசிரியர் இவர் தான். சிறந்த பாடலாசிரியருக்கான தமிழ்நாடு அரசு விருதினையும் 6 முறை வென்றவரும் வைரமுத்து மட்டும்தான்.

இதனிடையே, இவர் மீது சில ஆண்டுகளுக்கு முன்பு பாடகி சின்மயி பாலியல் புகார் அளித்தார். இந்த குற்றச்சாட்டு வைக்கப்பட்டது திரையுலகை அதிர்ச்சியாக்கியது.
இருப்பினும் வைரமுத்து மீது புகார்களை முன்வைத்தாலும் சட்டரீதியான எந்த வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை .

இந்த விவகாரம் குறித்து எந்தவித கருத்துக்களையும் தெரிவிக்காமல் மெளனம் காத்து வந்த வைரமுத்து, சமீபத்திய பேட்டியில் மறைமுகமாக இது பற்றி பேசியிருப்பதாகவே தெரிகிறது. அந்த பேட்டியில் அவர் கூறியதாவது: ‘உங்களைத் துரத்தும் நாயைக் கண்டுகொள்ளாமலே செல்ல வேண்டும். இல்லையெனில் அது உங்களைத் துரத்திக் கொண்டே வரும்.

விமர்சனங்களுக்கெல்லாம் பதில் சொல்ல ஆரம்பித்தால், நாயோடு போராடுவது போலேயே வாழ்க்கை போய்விடும். நாயைக் கண்டுகொள்ளாமல் ஓடிக் கொண்டே இருங்கள். நாய்கள் திரும்பி ஓடிவிடும்’ எனக் கூறி உள்ளார். இதன்மூலம் தன்மீது வைக்கப்பட்டுள்ள மீடூ குற்றச்சாட்டுகளுக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார் என்றே சினிமா வட்டாரத்தில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!