கோவை மாநகர் ரேஸ்கோர்ஸ் (RACE COURSE) மாடல் சாலையில் ‘மீடியா ட்ரீ’ (MEDIA TREE) என்னும் எல்இடி டவர் அமைக்கப்பட்டுள்ளது. இதனை KCP INFRA LIMITED நிறுவனம் வடிவமைத்துள்ளது. கோவைக்கு பெருமை சேர்க்கும் விதமாக இருக்கும் மீடியா ட்ரீயை அமைக்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில், அமைச்சர்கள் கேஎன் நேரு, செந்தில்பாலாஜி ஆகியோர் கடந்த மே 8ம் தேதி திறந்து வைத்தனர்.
சிங்கப்பூரில் புகழ்பெற்ற ‘கார்டன்ஸ் பை தி பே’ பூங்காவில் உள்ளது போல, ஆசியாவிலேயே முதன்முறையாக புதிய தொழில்நுட்பத்துடன் SLOPED LED SCREEN டெக்னாலஜியைக் கொண்ட எல்இடி விளம்பரப் பலகையை KCP INFRA LIMITED நிறுவனம் இந்த மீடியா ட்ரியில் பொருத்தியுள்ளது. 8K டெக்னாலஜியுடன், நேரலையாக ஒளிபரப்பு செய்யும் திறன் கொண்டது. இதன்மூலம், விழிப்புணர்வு அறிவிப்புகள், மாநகராட்சி அறிவிப்புகள், விளம்பரங்கள் மற்றும் வீடியோக்களை ஒளிபரப்பச் செய்ய முடியும்.
அதுமட்டுமில்லாமல், மொத்தம் 5,000 LED NODES-களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகையில், ஒரு மில்லியன் வண்ண நிறங்கள் மாறுபாடு கொண்ட தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக KCP INFRA LIMITED நிறுவனம் தெரிவித்துள்ளது. பாரிஸ் நகரத்தில் உள்ள ஈவ்விள் டவரைப் போல FLICKERING EFFECT பயனும் உள்ளது.
கோவையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளில் பல அம்சங்கள் இடம்பெற்றிருந்தாலும், KCP Infra-வின் முயற்சியால் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஈவ்விள் டவர் என அழைக்கப்படும், இந்த மீடியா ட்ரீ பொதுமக்களை பெரிதும் கவர்ந்து வருகிறது.
மீடியா ட்ரீ தொடர்பாக KCP Infra Ltd-யின் நிர்வாக இயக்குநர் கே. சந்திரபிரகாஷ் கூறுகையில், “தகவல்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் பிரதான நோக்கமாகும். அதேவேளையில், சிறந்த பொழுதுபோக்கு தளமாக இருப்பதோடு, விளம்பரங்கள் மூலமாக வருவாய் ஈட்டுவதையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மீடியா ட்ரீ விளம்பரதாரர்களுக்கு பெருமை சேர்க்கக் கூடியதாகும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய இசையமைப்பாளர்களின் அதிக சம்பளம் வாங்கும் பிரபலமாக இருப்பவர் அனிருத்தான். இவர் இசையமைக்கும் அத்தனை ஆல்பமுமே ஹிட் ஆவதால் தயாரிப்பாளர்கள்…
வித்தியாசமான கதைக்களம் சிவகார்த்திகேயனின் நடிப்பில் மடோன்னே அஸ்வின் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான “மாவீரன்” திரைப்படம் சிவகார்த்திகேயனின்…
பிக் பாஸ் பிரபலம் தர்ஷன் கைது செய்யப்பட்டது சென்னையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நேற்று மாலை ஜிம்மில் இருந்து திரும்பிய…
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள மேட்டு இருங்களூரை சேர்ந்த துரைசேகர் என்பவரது மகன் 25 வயதுடைய ஜெகன். பி.காம்…
பல்வேறு நாடுகள் மீது அமெரிக்க அதிபர் கூடுதல் வரி விதிப்பை அறிவித்ததன் எதிரொலியால் பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. அமெரிக்கா…
முழு நேர அரசியலில் விஜய் தனது கடைசி திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தில் நடித்துக்கொடுத்துவிட்டு முழு நேர அரசியல்வாதியாக உருமாறவுள்ளார் விஜய்.…
This website uses cookies.