தமிழக மக்களை கையேந்தி பிச்சை எடுக்க வைத்திருப்பது தான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை : அன்புமணி ராமதாஸ் ஆவேசம்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 January 2024, 2:41 pm

தமிழக மக்களை கையேந்தி பிச்சை எடுக்க வைத்திருப்பது தான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை : அன்புமணி ராமதாஸ் ஆவேசம்!!

தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் வாக்குச்சாவடி செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அன்புமணி ராமதாஸ், காவிரி உபநிர் திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும், தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்தும் உயிர் பலி தொடர்கிறது, மூத்த வழக்கறிஞர்களை கொண்டு முறையீடு செய்யவேண்டும், இந்த விவகாரத்தில் தமிழ அரசின் நிலைப்பாடு என்ன என்பதே தெரியவில்லை

ஸ்டெர்லைட் ஆலை எக்காரணத்தயைும் கொண்டும் திறக்க கூடாது.. இதனால் இரண்டு லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள்

ஜல்லிக்கட்டில் அரசு பரிசு அறிவிக்கிறது,காரை வைத்து விவசாயால் என்ன செய்யமுடியும், அதற்கு பதிலாக டிராக்டர் வாங்கி கொடுங்கள், விவசாய சார்ந்த பரிசு பொருட்களை கொடுங்கள்.. அதன் மூலம் வருமானம் கிடைக்கும், ஜல்லிகட்டை திட்டமிட்டு பாதுகாப்பு ஏற்பாட்டுடன் நடத்திட வேண்டும்..

பாலக்கோடு பகுதியில் தக்காளி விளைச்சல் அதிகம் உள்ளது, குளிர்பதன கிடங்கு அமைத்திடவும், பதப்படுத்தவும், மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்க திட்டங்களை கொண்டு வரவேண்டும்..

ஒரு மாநிலத்தின் வளர்ச்சிகாக தொழில் முதலீடுகள், தொழிற்சாலைகள் வரவேண்டும், அப்போது வேலைவாய்ப்புகள் கிடைக்கும், கடந்த காலங்களில் உலக முதலீடுகள் எவ்வளவு வந்தது,புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது என்பதை தெளிவுபடுத்த வேண்டும், தொழில் முதலீடுகளை வரேவற்கிறோம்..

தொப்பூர் கணவாய் பகுதி உயர்மட்ட மேம்பாலம் என்பதை யாரும் சொந்தம் கொண்டாடப்போவதில்லை, தாங்கள் ஒன்றும் ட்விட்டர் அரசியல் செய்யபோவதில்லை

காரிமங்கலத்தில் மது அருந்திய இளைஞர்கள் சிலர் தட்டிகேட்ட விவசாயியை கொலை செய்திருக்கின்றனர், உயரிழிந்திருக்கின்ற விவசாயிக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், அரசு தான் இதற்கு பொறுப்பு..

வாணியாறு உபரி நீர் திட்டம், பஞ்சப்பள்ளி உபரி நீர் திட்டம், சேனக்கல் உபரி நீர் திட்டம், தொப்பையாறு அணை உபநீர் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றவேண்டும் இதனால் தருமபுரி மாவட்ட விவசாயிகள் பயன்பெறுவார்கள், இதை விட்டுவிட்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு என அறிவித்தால் மட்டுமே போதாது..

பொங்கல் பரிசு குறித்து பேசும் போது.. தமிழக மக்களை கையேந்தி பிச்சை எடுக்க வைத்திருப்பது தான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை..

  • Sex is for pleasure, not for having a baby: Famous actress's bold comment உடலுறவு என்பது மகிழ்ச்சிக்காக.. குழந்தை பெற்றுக்கொள்ள அல்ல : பிரபல நடிகை அதிரடி கருத்து!