சென்னை: தெலுங்கு பட உலகின் பிரபல நடிகரை படப்பிடிப்பின் போது நடிகை கீர்த்தி சுரேஷ் ஓங்கி அடித்ததாக வெளியான தகவல் இணையத்தில் வேகமாய் பரவி வருகிறது.
நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல நடிகர் மகேஷ் பாபுவுடன் இணைந்து சர்காரு வாரி பாடா என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். வருகிற 12ம் தேதி படம் திரைக்கு வர இருக்கிறது. இதனை முன்னிட்டு படப்பிடிப்பு பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.
படத்தின் பாடல் ஒன்றில் நடித்து கொண்டிருந்தபோது, மகேஷ் பாபுவின் முகத்தில் தவறுதலாக கீர்த்தி சுரேஷ் அடித்து விட்டார். இதுபற்றி கீர்த்தி கூறிய கீர்த்தி சுரேஷ், காட்சிக்கு ஏற்ப நடிக்கும்போது எனது பக்கம் தவறு நடந்து விட்டது.
தெரியாமல் மகேஷ் சாரின் முகத்தில் அடித்து விட்டேன். உடனடியாக அவரிடம் மன்னிப்பு கேட்டேன். அதனால் ஒன்றும் இல்லை. கவலைப்பட வேண்டாம் என அவர் என்னிடம் கூறினார். ஆனாலும் நாள் 3 முறை அவரிடம் சென்று மன்னிப்பு கேட்டேன். அதனை அவர் லேசான விஷயங்களில் ஒன்றாக எடுத்து கொண்டார் என கூறியுள்ளார்.
இந்த படத்தில் கலாவதி என்ற வேடத்தில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், இதுவரை திரை துறையில்தான் நடித்துள்ள படங்களில் நடித்திராத வகையில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளார் என்று கீர்த்தி சுரேஷ் பெருமையுடன் கூறியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டு உள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்து உள்ளார்.
பரசுராம் இயக்கி உள்ளார். படத்தில் நடிகர்கள் சமுத்திரகனி, வெண்ணிலா கபடிக்குழு கிஷோர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.