கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கேந்திர வித்யாலயா பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.
குறிப்பாக அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் இங்குபயின்று வருகிறார்கள்.
இந்த பள்ளியில் இடம் கிடைப்பது என்பது சற்று கடினமான நிலையாகும். இங்கு பயிலக்கூடிய மாணவ, மாணவிகள் அகில இந்திய அளவில் தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ள முடியும் என்பதால் இந்த பள்ளியில் சேர்ப்பதற்கு பெற்றோர் இடையே கடும் போட்டி நிலவும். எனவே பெரும் சிபாரிசுக்கு இடையே இங்கு மாணவ மாணவிகள் சேர்க்கப்படுவது வழக்கம்.
இந்தநிலையில் இந்த பள்ளியில் பணி புரியும் ஆசிரியர் ராமச்சந்திர சோனி என்பவர் ஒருவர் 8 ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம் பாலியல் ரீதியான சீண்டல் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளார். தலைமை ஆசிரியர் நடத்திய விசாரணையில் ஆசிரியர் பல மாணவிகளிடம் இது போன்று பாலியல் ரீதியான சீண்டல்களை மேற்கொண்டதாகவும் எச்சரித்தும் கேட்பதில்லை என்றும் மாணவிகள் புகார் தெரிவித்து இருக்கிறார்கள்.
தங்களது புகாரை எழுத்து மூலமாகவும் தலைமை ஆசிரியரிடம் அளித்துள்ளனர். இந்த பிரச்சினை பள்ளியில் பூதாகரமாக வெடித்ததுடன் மாணவிகளின் பெற்றோருக்கும் தெரிய வந்தது.
தற்போது சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
புகாரைத் தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் ராமச்சந்திர சோனியை கைது செய்ததுடன் போக்ஸோ உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆசிரியர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் தமிழகத்தில் பல்வேறு கேந்திர வித்யாலயா பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியதும் தெரியவந்துள்ளது
மேலும் இவருடன் விசாரிக்கின்ற போது தான் இதுபோன்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டாரா என்பதும் தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
தேர்தலை சந்திக்கப்போகும் விஜய் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் முடிவடையவுள்ள நிலையில் ஜூன்…
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு HRWF பவுண்டேஷன் என்ற தனியார் அறக்கட்டளை சார்பாக "மகுடம்" விருதுகள் (2025) வழங்கும் விழா சென்னை…
டாப் நடிகரிடமே இப்படியா? அஜித்குமார் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் என்பதையும் அவரை வைக்க படம் இயக்க பல இயக்குனர்கள்…
சாக்லேட் பாய் ஸ்ரீகாந்த் நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாய் ஆக பல திரைப்படங்களில் வலம் வந்தார். ஆனால் ஒரு…
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…
This website uses cookies.