ஊட்டிக்கு சென்ற கார் 40 அடி பள்ளத்தில் கவிழ்ந்து பயங்கர விபத்து : கேரளாவை சேர்ந்தவர் பலி… 7 வயது குழந்தை உட்பட 4 பேர் காயம்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 May 2022, 10:02 am

கோவை : மேட்டுப்பாளையம் உதகை சாலையில் சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி, 4 பேர் படுகாயமடைந்தனர்.

கேரளா மாநிலம் வயநாடு புல்பள்ளி கனிகுளத்து ஹவுஸ் பகுதியை சேர்ந்தவர் ஜோஸ் (வயது 65). இவரும் இவரது மகன் யோபேஷ்(வயது 35),யோபேஷ் மகள் அனாமிகா(எ)அம்மு (வயது 9), ஆப்ரஹாம் மகன் தாமஸ் (வயது 68), செபாஸ்டியன் மகன் ஜார்ஜ்(வயது 60) ஆகியோர் கடந்த 16 ம் தேதி வயாநட்டிலிருந்து வேளாங்கண்ணி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு நேற்று சாமி தரிசனம் முடித்துவிட்டு ஊர் திரும்பினர்.

காரை யோபேஸ் ஓட்டி வந்தார். இந்த நிலையில் இன்று காலை 5.30 மணிக்கு மேட்டுப்பாளையம் உதகை சாலையில் 3 வது கொண்டை ஊசி வளைவு அருகில் கார் சென்று கொண்டு இருக்கும் போது ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சுமார் 40 அடி பள்ளத்தில் விழுந்தது.

இதில் காரில் பயணம் செய்த கேரளா வயநாடு பகுதியை சேர்ந்த ஜோஸ் (வயது 65) சம்பவ இடத்தில் உயிர் இழந்தார்.மேலும் காரில் பயணம் செய்த யோபேஷ், அனாமிகா, தாமஸ் மற்றும் ஜார்ஜ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற மேட்டுப்பாளையம் உட்கோட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளர் பாலமுருகன், மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் சண்முகம், உதவி ஆய்வாளர்கள் தாமோதரன், செல்வநாயகம், தனிப்பிரிவு தலைமை காவலர்கள் திருமதி கண்ணன், ராஜேஷ், விஜயகுமார் மற்றும் போலீசார் காரில் இருந்த அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 786

    0

    0