நாட்டையே உலுக்கிய தூக்கு தண்டனை.. கிரீஷ்மா வழக்கில் நீதிமன்றம் அதிரடி!
Author: Udayachandran RadhaKrishnan20 January 2025, 1:09 pm
குமரி கேரளாவை உலுக்கிய காதலனுக்கு கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த வழக்கில் காதலி க்ரீஷ்மா மற்றும் அவரது தாய் மாமன் நிர்மல் குமார் ஆகியோர் குற்றவாளிகள் எனவும் அவரது தாயார் சிந்து வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும் நெய்யாற்றின்கரை செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.பஷீர் ஆணை பிறப்பித்து இருந்த நிலையில் கடந்த 18 ம் தேதி தண்டனை அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்
இந்த நிலையில் 18 ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜரான க்ரீஷ்மா தனது தாய் தந்தையருக்கு தான் ஒரே மகள் என்றும் தனது வயதை கருத்தில் கொண்டு குறைந்த பட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதையும் படியுங்க: சமூக ஆர்வலர் கொலை.. மிக மோசமான விளைவை சந்திக்கும் திமுக : அண்ணாமலை வார்னிங்!
அப்போது ஷாரோனுக்கு ஆதரவாக வாதாடிய அரசு தரப்பு வழக்கறிஞர் குற்றவாளி க்ரீஷ்மா மனித குணத்தை மீறி அரக்க குணம் கொண்டு காதல் என்ற பெயரில் நம்ப வைத்து ஏமாற்றி இந்த கொலையை செய்துள்ளார்.
இதனால் ஒரு இளம் வாலிபனின் உயிர் துன்பப்பட்டு பிரிந்துள்ளது. ஆகையால் அதிகபட்சமாக மரண தண்டனை வழங்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இதனையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தண்டனை விவரங்களை இன்று அறிவிப்பதாக தெரிவித்து இருந்தார்.
அதன்படி இன்று காலை போலீசார் குற்றவாளிகள் க்ரீஷ்மா மற்றும் அவரது தாய் மாமன் நிர்மல் குமார் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 11 மணிக்கு தீர்ப்பு வழங்க நீதிமன்றம் வந்த நீதிபதி முதல் வழக்காக ஷாரோன் கொலை வழக்கிற்க்கான 586 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை வாசிக்க துவங்கினார்.
இதில் காதலன் ஷாரோனை காதலி க்ரீஷ்மா காதல் என்ற பெயரில் நம்ப வைத்து ஷாரோனை வீட்டிற்கு அழைத்து கசாயத்தில் விஷம் கலந்து கெடுத்து கொலை செய்துள்ளார்.
மேலும் ஒருமுறை இல்லை பலமுறை ஷாரோனை கொலை செய்ய முயன்று கொலை செய்து உள்ளார். ஆகையால் இது முற்றிலும் திட்டமிட்ட ஒரு படுகொலை. ஆகையால் குற்றவாளியின் வயது ஒன்று நீதிமன்றத்து பொருட்டு அல்ல.
ஷாரோனை நம்ப வைத்து துரோகம் செய்ததும் மட்டுமல்லாமல், கொலையும் செய்துள்ளார் கிரீஷ்மா. சாகும் போதும் கூட காதலி தண்டிக்கப்படக்கூடாது என ஷரோன்ராஜ் கூறியுள்ளார்.
ஆகையால் குற்றவாளி க்ரீஷ்மாவிற்கு தூக்குதண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தார். மேலும் கொலைக்கு உதவிய தாய்மாமன் நிர்மல் குமாருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனையும் விதித்து உத்தரவு பிறப்பித்தார்.