தமிழகத்தை வஞ்சிக்கும் கேரளா… சிறுவாணி அணையில் கறார் காட்டி கேரள அதிகாரிகள்.. நடவடிக்கை எடுக்குமா திமுக அரசு?!

Author: Udayachandran RadhaKrishnan
19 July 2024, 11:13 am

கேரள நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் சிறுவாணி அணையில் நிர்ணயிக்கப்பட்ட 45 அடி நீர்மட்டம் வருவதற்கு முன்னரே 42.02 அடியில் உள்ள நிலையில் 1000 கன அடி தண்ணீரை வெளியேற்றி உள்ளனர்.

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் சிறுவாணி அணை அமைந்து உள்ளது. இந்த அணை கோவை மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றாக இருக்கிறது. மிகவும் சுவையான குடிநீரான சிறுவாணி நீர், கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு பல்வேறு பகுதிளுக்கு தினமும் விநியோகிக்கப்படுகிறது

கோவை மாநகராட்சிக்கு நாள் ஒன்றுக்கு மொத்தத் தேவை என்பது 265 மில்லியன் லிட்டர் (எம்எல்டி) தண்ணீர் ஆக உள்ளது. இதில் 101.40 எம்.எல்.டி தண்ணர் சிறுவாணி குடிநீர் திட்டத்தில் இருந்து எடுத்து கோவை நகருக்கு விநியோகிக்கப்படுகிறது.

கடந்த 1973 ம் ஆண்டு ஆகஸ்ட் 19 ம் தேதி தமிழ்நாடு அரசு மற்றும் கேரள அரசு இடையே நீர் வழங்கல் திட்டத்திற்கான ஒப்பந்தம் போடப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தின் படி, சிறுவாணி அணையில் ஆண்டுதோறும் (ஜூலை 1 முதல் 30 வரை) 1.30 ஆயிரம் மில்லியன் கன அடி (டிஎம்சி) வழங்க வேண்டும். பழைய கோயம்புத்தூர் நகராட்சிக்கு 99 ஆண்டுகளாக குடிநீர் தேவைக்காக வழங்கப்பட வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டது.கேரள நீர்ப்பாசனத் துறை, சிறுவாணி அணையில், மாநிலங்களுக்கு இடையேயான ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டு உள்ள படி அணையின் கொள்ளளவை 50 அடியாக பராமரிக்க விடுவது இல்லை.

முழு நீர்த்தேக்க மட்டமான 49.53 அடிக்கு பதிலாக, அதிகபட்சமாக 45 அடி நீர்மட்டத்தை பராமரித்து வருகிறது. இதுவும் முல்லை பெரியாறு அணை போல் தான்.

சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை 5 அடி குறைப்பதால் 122.05 மில்லியன் கன அடி (mcft) தண்ணீர் பற்றாக்குறை கோவைக்கு ஆண்டுதோறும் ஏற்படுகிறது.

இது மொத்தமா அணையில் சேமிக்கப்படும் நீரில் 19% ஆகும்.இதன் காரணமாக கோடை காலங்களில் கோவை மாநகரின் தேவைக்கு போதுமானதாக சிறுவாணி அணை இல்லை.

இந்நிலையில் சிறுவாணி அணையின் வால்வுகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து உள்ள பாலக்காட்டில் உள்ள கேரள நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் கடந்த சில மாதங்களுக்கு முன் கோவை மாவட்டத்துக்கு வரும் நீர்வரத்தை பாதியாகக் குறைத்தனர்.

இது கோவை மாநகராட்சி அதிகாரிகள் இடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் இரு மாநில அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில் மீண்டும் தற்போது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை சிறுவாணி அணை நீர்மட்டம் உயர்ந்து உள்ளது கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி அணையின் நீர்மட்டம் 11 புள்ளி 32 அடியாக இருந்த நிலையில் தற்பொழுது 42.02 அடியாக உயர்ந்து உள்ளது.

அணையின் முழு கொள்ளளவான 49.53 அடி உள்ள நிலையில் கேரள மக்களுக்கு பாதிப்பு எனவும், அணையின் பாதுகாப்பு என 45 அடிவரை மட்டுமே நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் 42.02 அடி உள்ள நிலையில் அவசரகால வழியில் வினாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீரை சிறுவாணி அணையில் இருந்து கேரளா அதிகாரிகள் திறந்து விட்டு உள்ளனர்.

சிறுவாணி அணையின் வரையறுக்கப்பட்ட நீர்மட்ட அளவு 45 அடி அணை விரைவில் நிரம்பும் என்று அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் திடீரென முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று கூறி ஆயிரம் கன அடி தண்ணீரை வெளியேற்றி உள்ளது கண்டனத்துக்கு உரியது, இது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

தொடர்ந்து கேரளா அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். உடனடியாக தமிழக அரசு இதற்கு தீர்வு காண வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.

  • veera dheera sooran movie director express his worst feeling on delay release ஆதரவில்லாம இருந்தேன், அந்த வலியை தாங்கிக்க முடியல- மனம் நொந்த விக்ரம் பட இயக்குனர்..