சிறுவாணி அணையில் கேரள அரசு அடாவடி.. வேடிக்கை பார்க்கும் திமுக அரசு : எஸ்பி வேலுமணி குற்றச்சாட்டு!

Author: Udayachandran RadhaKrishnan
21 ஜூலை 2024, 8:09 மணி
SP velun
Quick Share

கோவையின் குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையில் 50அடி வருவதற்குள் கடந்த 19ஆம் தேதி 42 அடி தண்ணீர் தேங்கிய உடன்,1000 கன அடி தண்ணீரைத் திறந்து விட்ட கேரளா அரசை கண்டித்துள்ள முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி,கோவை மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறையும், திமுக அரசும் இதனை கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை துடியலூர் பகுதியில் நடந்த தமிழ்நாடு ஹையர் கூட்ஸ் ஓனர் அசோசியேசன் அமைப்பின் விழாவில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய எஸ் பி வேலுமணி, கோவை மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவானி அணை உள்ளதாகவும்,எம் ஜி ஆர் காலத்தில் துவங்கி கோவை மாநகராட்சிக்கு குடிநீர் ஆதாரமாக பயன்படுத்தப்பட்டுவருவதாகவும்,50 அடி வரை உயரம் கொண்ட அணையில் பாதுகாப்பு என கூறி 45 அடி தேக்குகின்றனர் எனவும் ,தான் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தபோது அணை பாதுகாப்பு என கேரளா அரசு கூறியதாகவும், அப்போதும் 50 அடி தேக்கலாம் என தாங்கள் குரல் கொடுத்தாகவும்,சந்தித்து பேசியதாகவும் குறிப்பிட்டார்.

கிட்டத்தட்ட 19 சதவீத நீர் வெளியேற்றப்படுகிறது எனவும் அணை பாதுகாப்பு என கூறி நீரை வெளியேற்றுகிறார்கள் எனவும் குற்றம் சாட்டிய எஸ் பி வேலுமணி ஆனால் அணை பாதுகாப்பாகதான் இருக்கிறது என தெரிவித்தார்.

மேலும் 42 அடி தேங்கியவுடன் 19.7.24 அன்று 1000 கன அடி நீரை தன்னிச்சையாக வெளியேற்றியுள்ளனர் எனவும் இதை கோவை மாவட்ட நிர்வாகம், பொதுபணித்துறையும், திமுக அரசும் இதனை கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது எனவும் குற்றம்சாட்டினார்.திமுக அரசு அமைந்த பிறகு கோவை மாவட்டத்திற்கு எந்த திட்டமும் கொண்டு வரவில்லை என குற்றச்சாட்டிய எஸ் பி வேலுமணி, முழுமையாக 50 அடியை நிரம்பினால் ஒராண்டிற்கு நமக்கு பயன்படும், குடிநீர் பிரச்சனையை வராது எனவும் குறிப்பிட்டவர் இவ்வாறு தன்னிச்சையாக தண்ணீரை திறந்துவிட்ட கேரள அரசுக்கு கண்டனத்தை தெரிவித்தார்.

அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குளங்கள், வாய்க்கால்களை துர்வாரி நொய்யல் ஆற்றில் வரும் தண்ணீரை தேக்கியதாகவும், தற்போது எந்த பணியும் மேற்கொள்ளாத காரணத்தால் நொய்யல் ஆற்றில் வரும் நீர் கடலில் கலப்பதாகவும், தற்போது செங்குளம் மற்றும் குறிச்சிகுளத்திற்கு வரக்கூடிய தண்ணீர் அடைக்கபட்டுள்ளது எனவும் கிருஷ்ணாபதி குளத்துக்கு வரும் நீரை பாலம் கட்டுவதாக கூறி தண்ணீரை தடுத்துள்ளார்கள் எனவும் பாலம் வருடம் முழுவதும் கட்டலாம் ஆனால் ஆற்றில் தண்ணீர் வரும்போதுதான் நீரை சேமிக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.

இதையெல்லாம் நிர்வாகம் பார்ப்பதில்லை எனவும் உடனடியாக அதிகாரிகள் குளங்களை தூர்வாருவதோடு நீரை தேக்க வேண்டும் எனவும் கேரளா அரசோடு பேசி 50 அடி உயரத்துக்கு சிறுவாணி அணையில் நீரை தேக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். எடப்பாடியார் முதலமைச்சராகவும் தான் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இருந்த பொழுது நேரடியாக கேரள முதலமைச்சரை சந்தித்து ஆனைமலை நல்லாறுத்திட்டத்திற்கும், நிதியை நாங்கள் தருகிறோம் என்று கூறி குழு அமைத்ததாகவும் அந்த குழுவை கிடப்பில் போட்டு விட்டார்கள் எனவும் ஆனைமலை நல்லார் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாகவும் ,கோவை மாவட்டத்திற்கு பில்லூர், சிறுவாணி ஆழியார் உள்ளிட்டவை குடிநீர் ஆதாரங்கள் என குறிப்பிட்டவர், எனவே உடனடியாக தமிழக அரசு கேரள அரசை தொடர்பு கொண்டு 50 அடியை தேக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

  • Divorce விவாகரத்து வழக்கில் டுவிஸ்ட்.. ‘ஓ மை கடவுளே’ பட பாணியில் கோர்ட்டில் நடந்த சம்பவம்!!
  • Views: - 165

    0

    0