Categories: தமிழகம்

தமிழக எல்லையில் கேரள அரசு சர்வே.. மாவட்ட ஆட்சியர்களுக்கு எச்சரிக்கை : அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் தகவல்!!

கேரளா அரசு தமிழக அரசின் அனுமதி இல்லாமல் தமிழக எல்லையில் சர்வே பண்ண கூடாது என வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருவாய்த்துறை அலுவலர்களுக்கான பணி ஆய்வுக் கூட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இதில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் சமீரன் ,
கூடுதல் தலைமை செயலாளர் வருவாய்த் துறை செயலாளர் குமார் ஜெயந்த், உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு பின்பு அமைச்சர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்

இந்த சந்திப்பில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேசும்போது, ஆர்டிஓ அலுவலகங்களுக்கோ, தாலுக்கா அலுவலகங்களுக்கோ மக்கள் அலையாத படி ஆன்லைனை அதிகப்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். விமானநிலைய பணிகள், சிப்காட் பணிகள் நில எடுப்பு பணிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

கோவை மாவட்டத்தில் நிறைய தொழிற்சாலைகள் வர வேண்டும். ஆகவே தொழிற்சாலைகளுக்கு நிலம் எடுக்க முன்னுரிமை கொடுக்க அதிகாரிகளுக்கு சொல்லியுள்ளோம். முதியோர் பென்சன் யாருக்கும் தடங்கல் இல்லாமல் கொடுக்க உத்தரவிட்டுள்ளோம்.

அமைச்சர் செந்தில்பாலாஜி கோவை மாவட்டத்தில் புதிதாக 6,000 பேருக்கு முதியோர் உதவித்தொகை வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். அதை வழங்குவதாக அமைச்சரிடம் வாக்குறுதி அளித்துள்ளோம்.

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகள் உள்ளது. 11 தாலுகா அலுவலகங்கள் தான் உள்ளது. 4 லட்சம் பேருக்கு ஒரு தாலுக்கா அலுவலகம் இருப்பது பணி செய்யாத சூழலை ஏற்படுத்துகிறது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

வரும் நிதியாண்டின் பட்ஜெட் தொடரில் நம்முடைய மாவட்டத்திற்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் வருவாய் தாலுகா அலுவலகங்கள் அமைப்பதற்கான பணியை செய்து கொடுப்போம்.

வருவாய் துறை ஆய்வில் அமைச்சர் செந்தில் பாலாஜி கவனம் செலுத்துகிறார். ஆன்லைன் பத்திரம் பதிவில் சரியாக இருந்தால் உடனே கிடைக்கும். பட்டா ,வாரிசு ,முதியோர் தொகை என எதாக இருந்தாலும் 15 நாளுக்குள் தீர்வு கிடைக்கும்.மனுக்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இ சேவை மையம் குறைவாக உள்ளது. அங்கு சில தவறுகள் நடக்கிறது அதன் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கேரளா அரசு தமிழகத்தில் சர்வே பண்ண வரும் பொழுது தமிழக அரசின் அனுமதி இல்லாமல் வரக்கூடாது என கேரள அரசுக்கு தெரிவித்துள்ளோம். இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் கவனமாக இருக்க அறிவுறுத்தியுள்ளார்.

சிப்காட்டிற்கு, யாரையும் கஸ்டப்படுத்தி நிலம் எடுப்பதில்லை.
25 ஆயிரத்து 150 பேருக்கு புதிய ஆட்சியில் ஒ ஏ பி., வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 6000 பேருக்கு கொடுக்கிறோம். இந்த அமைச்சர் சண்டை கட்டி வாங்கிவிடுகிறார். கோவை மாவட்டத்திற்கு வலுவான ஆளாக செந்தில் பாலாஜி உள்ளார்.

நில எடுப்பில் பிரட்சனை வரதான் செய்யும். இருப்பினும் யாரையும் கஷ்டப்படுத்தாமல் எடுக்கிறோம். முதல்வர் யாரையும் வருத்தத்தை ஏற்படுத்தக் கூடாது என தெரிவித்துள்ளார். சர்வேயரில் பாதி போஸ்டிங் இல்லை.வேகமாக பணிகள் நிறைவு செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நயன்தாராவை புகழ்ந்து பேசிய தனுஷ்.. ச்சே எவ்ளோ நல்ல மனசு!

நல்ல நண்பர்களாக வலம் வந்த தமிழ் சினிமா நட்சத்திரங்களான தனுஷ் மற்றும் நயன்தாரா இடையே தற்போது கோர்ட்டில் கேஸ் நடத்தும்…

3 minutes ago

தாய்மொழியைத்தான் பாஜக திணிக்கிறது.. அண்ணா பெயர் குறைந்தது.. அண்ணாமலை பேச்சு!

தினம்தோறும் ஏதாவது ஒரு இடத்தில் பாரதிய ஜனதா கட்சி தொண்டன் கைது செய்யப்பட்டு கொண்டு இருக்கிறான் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.…

12 minutes ago

‘டிராகன்’ பட நடிகை போனில் அந்த மாதிரி மீம்..ஷாக் ஆன பிரதீப் ..நெட்டிசன்கள் விமர்சனம்.!

கயாடு போன் மீமை பார்த்து கலாய்த்த பிரதீப் ட்ராகன் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள கயாடு லோஹர் தனக்குத்தானே மீம்ஸ் போட்டுகொண்டுள்ளார்,இந்த…

14 minutes ago

விஜய் தான் BEST..சூர்யா WORST.. ரசிகருக்கு ஜோதிகா சுடச் சுட பதிலடி.!

ரசிகரின் கமெண்ட்க்கு ஜோதிகா பதிலடி நடிகர் சூர்யா கங்குவா பட தோல்விக்கு பிறகு தன்னுடைய அடுத்தடுத்து படங்களில் மிகவும் பிஸியாக…

1 hour ago

கார்த்தி கேரியரில் ரூ.100 கோடி பட்ஜெட்டில் படம்… எதிர்பார்ப்பை எகிற வைத்த B4U!

நடிகர் சிவக்குமாரின் இளைய மகனும், சூர்யாவின் சகோதரருமான நடிகர் கார்த்திக்கு கடந்த ரெண்டு படங்கள் கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான்…

1 hour ago

உள்ளூரிலேயே விலை போகாதவர் PK… திமுக அமைச்சர் பரபரப்பு பேச்சு!

திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக செயற்குழு, திமுக சார்பு அணிகளின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம்…

2 hours ago

This website uses cookies.