தமிழகத்தில் வீடு எடுத்து கஞ்சா விற்பனை செய்த கேரள ரவுடி : நான்கரை கிலோ கஞ்சாவுடன் சாமி சிலைகளுகம் பறிமுதல்!!
Author: Udayachandran RadhaKrishnan26 February 2022, 11:20 am
விழுப்புரம் : வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4.1/2 கிலோ கஞ்சா மற்றும் சாமி சிலைகள் பறிமுதல் செய்து கேரளா மாநிலத்தைச் சேர்ந்த முக்கிய குற்றவாளியை கைது செய்தனர்.
விழுப்புரம் கே.வி.ஆர் நகர் பகுதியில் வசித்து வருபவர் பிரேம். இவரை சந்தேகத்தின் பெயரில் விழுப்புரம் தாலுக்கா காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து அவர் வீட்டில் சோதனை செய்ததில் அவர் வீட்டில் 4 கிலோ 500 கிராம் கஞ்சா சிறுசிறு பாக்கெட்களாக அவர் வைத்திருந்த கண்டுபிடிக்கப்பட்டன.
மேலும் அவர் வீட்டில் பித்தளையில் உருவான சாமி சிலைகள் உள்ளிட்ட பூஜை பொருட்களை பறிமுதல் செய்து விழுப்புரம் தாலுக்கா போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் அவருடன் சேர்ந்து புகழேந்தி(வயது 22) என்ற இளைஞரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வரவே அவரை கைது செய்து விசாரணை செய்ததில் இவர்கள் இருவரும் விழுப்புரத்தில் உள்ள கல்லூரி மற்றும் பள்ளிகள் இருக்கும் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்ததும் தெரிய வந்துள்ளது.
மேலும் ஆந்திரப் பகுதியில் இருந்து வாங்கி வந்து விழுப்புரம் மற்றும் கேரளா மாநிலத்திலும் விற்பனை செய்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கேரள மாநிலத்தை சேர்ந்த பழைய குற்றவாளியான பிரேம் ஏற்கனவே பல வழக்குகளில் விழுப்புரம் மாவட்ட போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
0
0