கனமழையால் ரயில்வே சுரங்க பாதையில் சிக்கிய கேரள சுற்றுலா பேருந்து : 6 மணி நேரமாக பேருந்துக்குள் தவிக்கும் பயணிகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 October 2023, 10:09 am

ரயில்வே சுரங்க பாதையில் சிக்கிய கேரள சுற்றுலா பேருந்து : 6 மணி நேரமாக பேருந்துக்குள் தவிக்கும் பயணிகள்!!

மதுரை ராஜா மில் சாலை அருகேயுள்ள ரயில்வே சுரங்க பாதையில் நேற்று பெய்த கன மழையில் சுற்றுலா பேருந்து ஒன்று சிக்கியது

கேரள மாநில கோழிக்கோட்டில் இருந்து ராமநாதபுரம் ஏர்வாடிக்கு 4 குழந்தைகள், 20 பெண்கள் உட்பட 40 பயணிகள் பயணம் செய்துள்ளனர்

நேற்று இரவு 3 மணி அளவில் சுரங்க பாதையை கடக்க முயன்ற போது தண்ணீரில் சிக்கி பேருந்து நகர முடியாமல் நிற்கிறது.

காலை 6 மணிக்கு தண்ணீர் வடிந்த பின்னர் ஜே.சி.பி இயந்திரம் மூலம் கயிறு கட்டி பேருந்தை இழுக்க எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தது.

பயணிகள் இரவு முழுவதும் பேருந்தின் உள்ளேயே கடும் இன்னல்களுடன் தங்கி இருக்கின்றனர்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 387

    0

    0