ராக்கி பாயை அசர வைத்த 19 வயது குல்கர்னி…இரும்பு பட்டறையில் வேலை பார்த்த மியூசிக் டைரக்டர்: KGF 2ன் நம்ப முடியாத உண்மைகள்..!!
Author: Rajesh27 April 2022, 1:13 pm
எதிர்பாராத மாபெரும் வெற்றியை கொண்டாடுவது KGF படத்திற்கு ஒன்றும் புதிதல்ல. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி ரசிகர்களை மீண்டும் மீண்டும் பார்க்க வைச்சு KGF சாப்டர் 1 வெற்றிக்கனியை பறித்துவிட்டது.
கேஜிஎஃப் பாகம் 1ல் ரசிகர்களுக்கு கொடுத்த மரண மாஸ், அதே க்ளாஸ், அதே வெறித்தனமான எடிட்டிங்கையும் கேஜிஎஃப் 2ம் பாகத்திலும் கொடுத்திருங்காங்க. இன்னும் எத்தனை பார்ட் வந்தாலும் ரசிகர்கள் அதை தலைல தூக்கி வைச்சு கொண்டாடுவாங்கனு சொன்னா யாரும் நம்பாம இருக்க மாட்டாங்க.
ஏன்னா, கே.ஜி.எஃப் கதை ரத்தத்துல எழுதுன கதை. ரத்தத்தால அதை தொடரும்போது வரும் வெற்றிகள் கணக்கிட முடியாதது. அந்த ரத்த சரித்திரத்தோட இரண்டாவது பாகம் வெளியாகி ரசிகர்களை பட்டி தொட்டியெங்கும் படத்தை வெற்றி பெற வச்சுருக்காங்க.
வாழ்க்கைனா பயம் இருக்கணும். அது நெஞ்சுக்குள்ள மட்டும்தான் இருக்கணும். ஆனால், அந்த நெஞ்சு நம்மளோடதா இருக்கக்கூடாது. நம்மள எதிர்த்து நிக்கிறவங்களோடதான் இருக்கணும் இந்த டயலாக் யாருக்கு பொருந்துதோ, இல்லையோ ராக்கி பாய்க்கு கண்டிப்பா பொருந்தும்.
தன்னோட வசனம், நடிப்பு, இசை, ஒளிப்பதிவுனு ஒவ்வொரு விஷயத்தாலயும் தனக்கு போட்டியா வந்த படங்களை நடுங்க வைச்ச கே.ஜி.எஃப் சாப்டர் 1 ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அடுத்த பார்ட் எப்ப வரும்னு பலரையும் ஏங்க வைச்ச இந்தப் படத்தோட இரண்டாவது பாகம் ஏப்ரல் 14ம் தேதி வெளியாகி வேற லெவல் ஹிட் கொடுத்துள்ளது.
உலகம் முழுக்க 10,000 திரையரங்குகளில் வெளியானது. பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ், சஞ்சய் தத், ஸ்ரீநிதி, ரவீனா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். உலக அளவில் 500 கோடிக்கும் அதிகமாக வசூலை வாரி குவித்துள்ளதாக நாளுக்கு நாள் செய்திகள் வந்தவண்ணம் இருக்கு.
ராக்கி பாய் மட்டுமில்ல கே.ஜி.எஃப் படத்தின் எடிட்டர் மற்றும் இசையமைப்பாளர்களின் ரியல் கதைகள்கூட படமாக எடுத்தால் 100 நாள் ஓடும் அளவிற்கு செம இன்ட்ரஸ்டிங்கா இருக்குது.
படத்தில் ராக்கி பாய் பேசுனா மாஸ் டயலாக் அனைத்திற்கும் பொருந்தும் ஒரு ரியர் ஹீரோவா உஜ்வல் குல்கர்னிய சொல்லலாம். படத்தில கேள்வி படாத பெயரா இருக்குனு யோசிக்குறீங்களா. இவரு தான் KGF Chapter2 படத்தோட எடிட்டர். இப்படி வேற லெவல் எடிட்டடிங்கில் மாஸ் காட்டிய இந்த ரியல் டானின் வயது வெறும் 19 தான் சொன்னா உங்களால நம்ப முடியுதா?
யூ-ட்யுபில் ஃபேன் மேட் எடிட் செய்து கொண்டிருந்த பையன் தான் உஜ்வல். KGF chapter 1 வந்தப்போ அவனோட ஸ்டைல்ல ஒரு Fan made edit போட , அது பிரசாந் நீல் பார்வையில் பட்டதும் அவருக்கு ஆச்சரியம் தாங்கல. ஒரு டிரைலர் கட் பண்ணிக்காட்டு பாப்போம்னு டைரக்டர் சொன்னதும் பையன் பரபரப்பாகி அதைவிட பரபரப்பா ஒரு டிரைலரைக் காட்டிருக்கான் உஜ்வல்.
அவ்வளவுதான், நீதான் மொத்தபடத்துக்கும் எடிட்டர்னு பிரசாந்த் சொல்லிருக்காரு. பையனுக்கு இப்போதான் 19 வயசு. இயக்குநர் பிரசாந் நீல் எடிட் பண்ண சான்ஸ் குடுத்தப்போ உஜ்வலுக்கு வயசு 17 தான். அதிர்ஷம் வாழ்க்கையில ஒரு தடவ தான் கதவ தட்டும்…தன்னோட திறமையால அந்த அதிர்ஷ்டத்தை யூஸ் பண்ணி இப்போ PAN INDIA பேமஸ் ஆகியுள்ளார் உஜ்வல் குல்கர்னி.
எடிட்டர் ஸ்டோரி இப்படினா மியூசிக் டைரக்டர் ஸ்டோரி அதவிட பயங்கரம்…படம் பார்த்த அனைவருக்கும் அடிக்கடி வாயில் முனுமுனுக்கும் பாட்டு ‘அக்னி நெஞ்சில் குமுறும் எரிமலை’. பரம்பரை பரம்பரையாக இசை பின்னணில இருந்து வந்த அனைவருக்கும் சொடக்கு போட்டு சவால் விடும் அளவுக்கு BGM பண்ணுன மியூசிக் டைரக்டர் ஒரு இரும்புப் பட்டறைல வேலை பார்த்துருக்காருனா உங்களால நம்ப முடியுதா? நீங்க நம்பலைனாலும் அதுதான் நெசம்.
சின்ன வயசுல இருந்தே மியூசிக் மேல ரவி பஸ்ரூர்க்கு தீராத காதல். ஆனால், 14 வயசுலயே வேலைக்கு போக வேண்டிய சூழல். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அப்பப்போ மியூசிக் குரூப் கூட போய் இன்ஸ்ட்ரூமெண்ட்லாம் வாசிப்பாராம். அப்புறம் சினிமாக்குள்ள வரணும்னு ஆசை வந்துருக்கு.
இரும்புல சிற்பங்கள் செய்யுற வேலை செய்துகிட்டே சினிமாக்காரங்களை தேடி வாய்ப்பு கேட்க ஆரம்பிச்சிருக்காரு. கன்னட மொழியில் சில படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றியிருக்காரு. அப்புறம் கே.ஜி.எஃப் படத்துக்கு சல்லடைல சலிச்சு ரவி பஸ்ரூர மியூசிக் டைரக்டரா பிரஷாந்த் செலக்ட் பண்ணியிருக்காரு.
லாக் டௌன்லகூட தன்னோட இரும்பு சிற்பம் வேலையை திரும்ப செய்த வீடியோ சமூக வலைதளங்கள்ல செம வைரல் ஆச்சு. மனுஷன் மியூசிக் போட்ட வேகத்துல இந்தியா முழுக்க ஒரு புயலே உருவாச்சுனு சொல்லலாம். அந்தப் புயலோட சப்தம் படம் பார்த்துட்டு வந்த ஒவ்வொருத்தர் காதுலயும் ஒலிச்சுட்டே இருக்கும். ஒவ்வொரு தடவையும் அந்த மியூசிக்கை கேட்கும்போது புதிய உத்வேகம் கிடைக்கும்.
மாஸ் மியூசிக்ல மட்டுமில்ல ‘தந்தான நானே தானே நானே’னு சென்டிமென்ட் தீம்லயும் கண்ணீர் வர வைச்சிருப்பாரு. வேற லெவல் நீங்க! கே.ஜி.எஃப் 3, சலார் படங்களில்கூட இவர்தான் மியூசிக் போடுறாரு. வெயிட்டிங் ரவி பஸ்ரூர். இப்படி KGF 2 ONSCREEN ஆ தாண்டி ஆப் ஸ்கீரினிலும் ரியல் ஹீரோஸ் பட்டைய கிளப்பி இருக்காங்க.