கேஜிஎப் செய்து வரும் சாதனை: உருக்கமாக பேசி நன்றி தெரிவித்த யாஷ்.. வைரலாகும் வீடியோ..!

Author: Rajesh
21 April 2022, 7:34 pm

கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கேஜிஎப் 2. இந்த படம் தற்போது 700 கோடி வசூல் செய்து தற்போது பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்து வருகிறது.. இந்தியில் மட்டும் இந்த் படம் 250 கோடி வசூல் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மக்கள் திரையரங்குக்கு கேஜிஎப் 2 பார்க்க படையெடுத்துச் செல்கின்றனர். இதனால் தொடர்ந்து இந்த படத்தின் வசூல் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் நாயகன் யாஷ் உருக்கமாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ஒரு சின்ன கிராமத்தில் வறட்சி அதிகமாக இருந்த நேரத்தில் மக்கள் பிரார்த்தனை நடத்த இருந்தனர். அந்த நேரத்தில் எல்லோரும் வரும்போது ஒரு சிறுவன் மட்டும் குடையுடன் வந்தான். அதை சிலர் ஓவர் உழகெனைநnஉந என்றார்கள். அதற்கு பெயர் தான் ‘நம்பிக்கை’. ‘நான் இருக்கும் நிலைக்கு வெறும் நன்றி சொன்னால் மட்டும் போதாது. எனக்கு அன்பை வாரி வழங்கும் உங்கள் எல்லோருக்கும் நன்றி. மொத்த கேஜிஎப் டீம் சார்பாக சொல்கிறேன், உங்களுக்கு சிறந்த சினிமா அனுபவத்தை தர வேண்டும் என விரும்பினேன். நீங்கள் என்ஜாய் செய்கிறீர்கள் என நம்புகிறேன்’ என யாஷ் அந்த வீடியோவில் கூறி உள்ளார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1253

    21

    0