தென்னிந்திய திரைப்படத்திற்கு உலகளவில் கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு.. கே.ஜி.எப். – 2 படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடிகளா.?

Author: Rajesh
24 May 2022, 10:39 am

நடிகர் யஷ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 14-ம் தேதி உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் தான் ‘கே.ஜி.எஃப். 2’. கன்னடம் தவிர, தமிழ் தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியானது இந்தப் படம். ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியாகி 4 வாரங்கள் ஆன போதிலும், பல திரையரங்குகளில் வரவேற்பு குறைந்த வண்ணம் இல்லை. இதனால் எதிர்பார்ப்புகளையும் மீறி இந்தப் படம் வசூலில் சாதனைப் படைத்து வருகிறது.

இந்தப் படம் இந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் உலகளவிலும் பல சாதனைகளை செய்து வருகிறது. அந்தவகையில் கனடாவில் மிகப்பெரியளவிலான பாக்ஸ் ஆபிஸ் சாதனையை படைத்துள்ள கே.ஜி.எஃப்.2, கனடாவில் அதிக நாட்கள் திரையரங்கில் ஓடும் படம் என்ற பெயரையும் பெற்றிருக்கிறது.

இதுவரை உலகளவில் இப்படம் ரூ.1,225.81 கோடி பாக்ஸ் ஆபிஸில் சம்பாதித்திருப்பதாக வணிக ரீதியான ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி