ரஜினிகாந்தை சந்தித்த “கேஜிஎப்” பட இயக்குனர் ? இது வெறித்தனமான அப்டேட்டா இருக்கே .!

Author: Rajesh
21 June 2022, 6:55 pm

கேஜிஎப் என்ற சூப்பர் ஹிட் திரைப்படத்தை கொடுத்து ரசிகர்களை மிரட்டியவர் பிரசாந்த் நீல். கேலார் தங்க சுரங்கத்தை மையமாக வைத்து உருவான இப்படம் இரு பாகங்களாக வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்றது. இந்தியாவில் பல மொழிகளில் வெளியான இப்படம் வசூல் சாதனை படைத்தது.

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு பிரபாஸ் நடிப்பில் ‘சலார்’ படத்தை இயக்கி வருகிறார் பிரசாந்த் நீல். இந்த படத்திற்கு பிறகு ஜூனியர் என்.டி.ஆர் படத்தையும் இயக்கவுள்ளார். இப்படி அடுத்தடுத்து பிசியாக இருக்கும் பிரசாந்த் நீல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை சமீபத்தில் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அப்போது ரஜினியிடம் ஒரு கதையை ஒன்றை பிரசாந்த் நீல் கூறியுள்ளார். இந்த கதை ரஜியை கவர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ரஜினியும், பிரசாந்த் நீல் விரைவில் இணைவது உறுதியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதோடு கேஜிஎப் படத்தின் வெற்றிக்கு பிரசாந்த்தை நீலை சூப்பர் ஸ்டார் பாராட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!