ரவுடிகளை ஊக்குவிக்கும் கேஜிஎப்… ஒன்னுக்கும் உதவாத படம் என விமர்சித்த பிரபலம்..!

Author: Rajesh
21 ஏப்ரல் 2022, 11:01 காலை
Quick Share

2018, ஆம் ஆண்டு கன்னட நடிகர் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான கேஜிஎப் திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி பிரம்மாண்டமான வரவேற்பை பெற்றது. இதனிடையே இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. பல மொழிகளில் கே ஜி எஃப் 2 வெற்றியான நிலையில் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய சாதனையை இத்திரைப்படம் கொடுத்துள்ளது.

உலகெங்கிலும் இத்திரைப்படம் பல திரையரங்குகளில் வெளியான நிலையில் ரிலீசான ஐந்தே நாட்களில் 625 கோடியை கேஜிஎப் 2, திரைப்படம் வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கே ஜி எஃப் 2 திரைப்படத்தில் கேங்ஸ்டராக வலம் வரும் யாஷின் ஆக்ஷன் காட்சிகளும் ராக்கி பாய் கதாபாத்திரமும் ரசிகர்களின் பேராதரவைப் பெற்றது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற வைலேன்ஸ் வைலேன்ஸ் வைலன்ஸ் என்ற வசனங்களும் துப்பாக்கிச் சூடும் காட்சிகளும் மாஸாக காண்பிக்கப்பட்டாலும் பல எதிர்ப்புகளையும் கிளப்பியுள்ளது. இதுபோன்ற வன்முறையான காட்சிகள் இளைஞர்களின் ஆக்ரோஷத்தை தூண்டும் வகையில் உள்ளதாக பெங்களூர் முன்னாள் கமிஷனர் பாஸ்கர் ராவ் காட்டமாக கூறியுள்ளார்.

கேஜிஎப் 2 திரைப்படத்தில் நடிகர் யாஷ்இ தனது கையில் துப்பாக்கி ஏந்தி உடல் முழுவதும் ரத்த கரையோடு பார்லிமென்ட் உள்ளே சென்று எம்பியாக உள்ளவரையே துப்பாக்கியால் சுட்டுக்கொல்லும் காட்சிகள் இடம்பெற்றிருக்கும். அதுமட்டுமில்லாமல் காவல் நிலையத்தின் வாசலிலேயே பல போலீசை ஒரே ஆளாக நின்று சுட்டு தீர்க்கும் காட்சிகளும் இடம் பெற்றிருக்கும்.

இந்த நிலையில் இப்படிப்பட்ட காட்சிகளை பார்க்கும் இளைஞர்கள் கண்டிப்பாக வன்முறையை கையில் எடுக்கும் அபாயம் உள்ளதாகவும் இதுபோன்ற காட்சிகளை காட்டுவதில் இருந்து இயக்குனர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் பாஸ்கர் ராவ் தெரிவித்துள்ளார். மேலும் ரவுடிகளை மிகப்பெரிய கேங்ஸ்டர்கள் போல் நடிகர்களை நடிக்க வைத்து இயக்குனர்கள் காட்டுவதை தவிர்க்க வேண்டும் என்றும் காட்டமாக தெரிவித்துள்ளார்.

  • Woman Aghori ஒட்டுத் துணியில்லாமல் கோவிலுக்குள் நுழைந்த பெண் அகோரி… அனுமதி மறுப்பால் தீக்குளிக்க முயற்சி!
  • Views: - 1363

    44

    21