முதல் நாளே ராக்கி பாய் மாஸ் காட்டிட்டாரு..! ஓரம்கட்டப்படும் பீஸ்ட்.. விஜய் படத்துக்கே இப்படி ஒரு நிலைமையா..?

உலகம் முழுவதும் ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் ஸ்ரீநிதி ரெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்த பிரமாண்ட திரைப்படமான கேஜிஎஃப் 2 திரைப்படம் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் நேற்று ரிலீசான தளபதி விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் மற்றும் இன்று ரிலீஸ் ஆன கேஜிஎஃப் 2 ஆகிய இரு திரைப்படமும் நேருக்கு நேர் மோதி, எது பின்னுக்குத் தள்ளப்படும் என்பதை அறிய சினிமா ஆர்வலர்கள் வெறிகொண்டு காத்திருந்தனர்.
அப்படி இருக்கும் இந்த சூழலில் ரிலீசான முதல் நாள் அன்றே, கேஜிஎஃப் 2 திரைப்படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 300-க்கு மேற்பட்ட இடங்களில் ஸ்கிரீன்னிங் செய்து பீஸ்ட் திரைப்படத்தை பின்னுக்குத் தள்ளி உள்ளது. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் அதுமட்டுமில்லாமல் பீஸ்ட் படத்திற்கு நிகராக தமிழக இடம் பிடிக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

அதுமட்டுமின்றி இனிவரும் நாட்களில் இன்னும் கூடுதலான இடங்களில் கேஜிஎஃப் 2 திரைப்படம் திரையிடப்பட்டு, தளபதி விஜயின் பீஸ்டை பிளாப் ஆக்கப்போகிறது. அத்துடன் இன்று சித்திரை திருநாளை முன்னிட்டு, தமிழ் வருடப்பிறப்பை கொண்டாடும் விதத்தில் திரளானோர் திரையரங்கை நோக்கி படையெடுத்து கேஜிஎஃப் 2 திரைப்படத்தை பார்க்க கிளம்பிவிட்டனர்.

சமூக வலைத்தளங்களிலும் கேஜிஎஃப் 2 திரைப்படத்தை இயக்கிய பிரசாந்த் நீலை புகழ்ந்து தள்ளுகின்றனர். அதுமட்டுமின்றி கேஜிஎஃப் 2 திரைப்படத்தை பார்த்த பிறகு அதனுடைய கதையை வைத்தே கூடிய விரைவில் கேஜிஎஃப் 3 வரவேற்பதற்காக ரசிகர்கள் இப்பொழுதிருந்தே கொண்டாட ஆரம்பித்துள்ளனர்.

மேலும் கேஜிஎஃப் 2 ஒரு சில வாரங்களிலேயே நிச்சயம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் சாதனையை அசால்டாக குவிக்கப் போகிறது. இப்படியிருக்கும்போது பீஸ்ட் திரைப்படத்தின் வசூல் நிச்சயம் கேஜிஎஃப் 2 படத்தினால் பெரிதும் பாதிக்கப்பட போகிறது என்பது இப்பொழுதே திட்டவட்டம் ஆகிவிட்டது.

UpdateNews360 Rajesh

Recent Posts

சூர்யாவுக்கு முன்னாடியே அவர் சிக்ஸ் பேக் வச்சிந்தார்- சிவகுமாருக்கு பதிலடி கொடுத்த விஷால்?

சிக்ஸ் பேக் வைத்த முதல் நடிகர் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி…

12 minutes ago

லிப்டில் வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. எல்லை மீறிய வாலிபர் எஸ்கேப் : சென்னையில் ஷாக்!

சென்னை வானகரம் அடுத்த அடையாளம்பட்டு பகுதியில் கே ஜி சிக்னேச்சர் எனும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் அமைந்துள்ளது. இந்த…

17 minutes ago

பாலியல் வன்கெடுமைக்கு பலியான 80 வயது மூதாட்டி.. சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சோகம்!

சென்னை ராயப்பேட்டையில் வசித்து வந்த 80 வயது மூதாட்டி, கடநத் 5ஆம் தேதி இரவு 11 மணி அளவில் வீட்டில்…

37 minutes ago

எனக்கு போதும் நீங்க சாப்புடுங்க- ஷாலினிக்கு அன்போடு கேக் ஊட்டிவிட்ட அஜித்! அப்படி என்ன விசேஷம்?

அஜித்-ஷாலினி ஜோடி அஜித்-ஷாலினி ஆகிய இருவரும் “அமர்க்களம்” திரைப்படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர். அப்போதே அவர்களுக்குள் காதல் பூத்தது. அதனை தொடர்ந்து…

1 hour ago

கோவையில் ஜல்லிக்கட்டு திருவிழா பணிகள் விறுவிறு… 750 காளைகளுடன் மல்லுக்கட்டும் 500 காளையர்கள்..!!

கோவையில் நாளை மறுநாள் செட்டிபாளையம், எல்.என்.டி பைபாஸ் சாலையில் ஜல்லிக்கட்டு போட்டி கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவை தமிழர்…

1 hour ago

டாக்டர் ஆகணும்னா கேட்டரிங் படிக்கணும்? மண்டையை பிச்சிக்க வைத்த தலைவாசல் விஜய்?

உன் Goal என்ன? டாக்டர் ஆகவேண்டும், Engineer ஆக வேண்டும், வக்கீல் ஆகவேண்டும், முதல்வர் ஆகவேண்டும் என பலருக்கும் பல…

2 hours ago

This website uses cookies.