பீஸ்ட் பட சாதனையை முறியடிக்க காத்திருக்கும் KGF2 : பாட்டுக்கே இப்படியா.. அப்ப படம் வந்தா?!!
Author: Udayachandran RadhaKrishnan22 March 2022, 5:41 pm
கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் படம் உலகம் முழுவதும் பெரும் வெற்றி பெற்றது. இந்த மாபெரும் வெற்றியால் கேஜிஎஃப் படக்குழு இரண்டாம் பாகத்தை உருவாக்கி வந்தது.
படம் விரைவில் வெளியாக வேண்டிய சூழலில் கொரோனா காரணமாக தடைப்பட்டது. தற்போது இந்திய அளவில் இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
எப்படி வந்தாலும் படம் வசூலில் விண்ணை முட்டும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கும் சூழலில் KGF2 படத்தின் இரண்டாம் சிங்கிள் பாடல் வெளியானது. அனைவரையும் கவர்ந்த இந்த பாடல் இரண்டு மணி நேரத்தில் 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது.
பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் வெளியாகி இன்றுடன் 37 நாட்கள் ஆகும் நிலையில் 212 மில்லியன் பார்வையாளர்களை யூடியூப்பில் கடந்துள்ளது. ஆனால் KGF2 சுலபமாக இதை கடந்து சாதனை படைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.