லிப்ட்டில் சிக்கிய கேலோ இந்தியா விளையாட்டு வீராங்கனைகள்.. அரை மணிநேரம் போராடி மீட்பு ;வைரலாகும் வீடியோ…!

Author: Babu Lakshmanan
27 January 2024, 7:22 pm

கோயம்பேட்டில் கேலோ இந்தியா விளையாட்டு வீராங்கனைகள் 10 பேர் விளையாட்டுக்கு செல்லும் போது லிப்டில் சிக்கியதால் பரபரப்பு நிலவியது.

சென்னை கோயம்பேடு அருகே உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் 5வது தளத்தில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த கால்பந்து வீராங்கனைகள் 23 பேர் தங்கி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் கேலோ இந்தியா போட்டி முதல் சுற்றில் வெற்றி பெற்று இரண்டாம் சுற்றிற்காக கிளம்பி சென்றனர்.

அப்போது, ஐந்தாம் மாடியில் இருந்து இறங்கும்போது லிப்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக முதல் தளம் சிக்கிக் கொண்டது. இதில் பத்து கால்பந்து வீராங்கனைகள் சிக்கிக்கொண்டனர். இதனை அடுத்து, ஓட்டல் நிர்வாகம் சார்பில் கடப்பாறைகள் கொண்டு அரை மணி நேரம் போராடி வீரர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் துரிதமாக செயல்பட்டு லிப்ட் உடைத்து வீராங்கனைகளை பத்திரமாக மீட்டனர். இச்சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

  • திடீரென மொட்டையடித்த சுந்தர்.சி.. ரூ.1 லட்சம் நன்கொடை.. விறுவிறுப்படையும் மூக்குத்தி அம்மன் 2!