கனிமொழி எங்கே? திமுக மகளிரணி எங்கே? கேள்விகளால் துளைத்தெடுத்த குஷ்பூ!

Author: Hariharasudhan
2 January 2025, 4:29 pm

கனிமொழி எங்கே? எல்லாவற்றிற்கும் முன்வந்து பேசும் திமுக மகளிரணி எங்கே? என பாஜக பிரமுகர் குஷ்பூ கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை: சென்னை தியாகராய நகரில், பாஜக பிரமுகர் குஷ்பூ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் ஒவ்வொரு முறையும் பெண்களுக்கு பாலியல் தொல்லை நடக்கும்போது, கட்சியைத்தான் பெரிதுபடுத்துகிறீர்கள். ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை நடக்கும்போது, எந்தக் கட்சியினரும் பேசலாம்.

நாங்கள் இருப்பது பாஜக அலுவலகம். எங்கள் பின்னால் பாஜக இருக்கிறது. அது வேற விஷயம். தயவுசெய்து இதனை அரசியல் ஆக்காதீர்கள். நீங்கள் ஆளும் மாநிலங்களில் இது நடக்கவில்லையா என கேள்வி கேட்காதீர்கள். பெண்கள் ஒன்றும் அரசியல் ஃபுட்பால் கிடையாது, இங்கேயும், அங்கேயும் தூக்கி வீசுவதற்கு.

பாதிக்கப்பட்ட பெண்ணை நான் நிச்சயம் பாராட்டுகிறேன். தைரியமாக வெளியேச் சொன்னார். நிறைய பெண்கள் வெளியே சொல்ல மறுக்கிறார்கள். என்னைப் போன்று வேறு பெண்கள் பாதிக்கப்படக்கூடாது என நினைத்த அந்தப் பெண்ணை பாராட்ட வேண்டும். அந்தப் பெண் பற்றிய தகவல்களை வெளியே யார் கொடுத்தது?

Kushbu about Kanimozhi MP

அவர்களை முதலில் தண்டிக்க வேண்டும். சட்ட ரீதியாக அது தவறுதான். ஏன் அது பற்றி பேசக் கிடையாது? எந்த மாநிலமாக இருந்தாலும் பெண்களுக்கு எதிராக வன்முறை நடந்தால் கேள்வி கேட்போம். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு நீதி கேட்டு, பாஜக மகளிரணி நாளை பேரணி நடத்துகிறது.

நான் மகளிர் ஆணையத்தில் இருந்துள்ளேன். மிகவும் மோசமான புகார்கள் வரும். மற்ற மாநிலங்களை ஒப்பிடாதீர்கள். என் வீட்டில் பிரச்னை நடக்கும்போது, மற்ற வீட்டில் நடக்கிறதா இல்லையா என பேசக்கூடாது. கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு மற்றவர்கள் வீட்டில் கல் வீசக்கூடாது.

இதையும் படிங்க: காருக்குள் இளம்பெண்ணுடன் ஐடி ஊழியர்கள் செய்த வேலை… சோதனைச்சாவடியில் டுவிஸ்ட்!

சௌமியாவை ஏன் கைது செய்தீர்கள்? கனிமொழி எங்கே? எல்லாவற்றிற்கும் முன் வந்து பேசுவார்களே, திமுக மகளிரணி எங்கே? கைதுக்கு நாங்கள் பயப்படவில்லை. திமுக சார்பாக எந்தப் பெண் குரல் கொடுத்தார்? அமைச்சர், எம்.பி யாராவது குரல் கொடுத்தார்களளா?

சீமான் பற்றி பேச விரும்பவில்லை. அவரை முதல்வரைப் பார்த்து கேள்வி கேட்கச் சொல்லுங்கள். மாநில மகளிர் ஆணையம் எங்கே போனது? எங்கேயாவது பேசினாகளா? அரசு சொல்வதைத்தான் அவர்கள் செய்வார்கள். யார் அந்த சார்? அதைத்தான் கேட்டுக் கொண்டிருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

  • Tamannaah Bhatia caravan incident கேரவனில் தமன்னாவுக்கு அப்படி..? கண்ணாடியைப் பார்த்த அந்த நொடி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!