பணத்திற்காக கடத்தப்பட்ட நபர் ஆந்திராவில் மீட்பு ; கடத்தலில் ஈடுபட்டவர்களில் இருவர் கைது… ஒருவர் தப்பியோட்டம்!!

Author: Babu Lakshmanan
17 September 2022, 10:03 pm

பணத்திற்காக கடத்திய நபரை குடியாத்தம் போலீசார் ஆந்திர மாநிலத்தில் மீட்ட நிலையில், கடத்தலில் ஈடுபட்டவர்களில் 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

குடியாத்தம் அடுத்த பரதராமி தாசிராப்பல்லி கிராமத்தைச் சேர்ந்த தாமோதரன் (வயது 47) என்பவர், ஆருத்ரா கோல்டு டிரேடிங் கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். பரதராமி பகுதியில் பல பேரிடம் தாமோதரன் பணிபுரியும் ஆருத்ரா கோல்ட் டிரேடிங் கம்பெனியில் பணத்தை முதலீடு செய்ய வைத்துள்ளார்.

பணத்திற்காக கடத்தப்பட்ட நபர் ஆந்திராவில் மீட்பு ; கடத்தலில் ஈடுபட்டவர்களில் இருவர் கைது… ஒருவர் தப்பியோட்டம்!!

முதலீடு செய்த பணத்தை திரும்ப பெற்றுத் தரும்படி தாமோதரனிடம் கேட்டுள்ளனர்.
அதனால், பணம் முதலீடு செய்த பரதராமி பகுதியை சேர்ந்த மூன்று பேர் சேர்ந்த கும்பல் கடந்த 12ஆம் தேதி தாமோதரனை கடத்தி உள்ளனர். இது தொடர்பாக தாமோதரன் மனைவி மகாலட்சுமி பரதராமி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா உத்தரவின் பேரில், குடியாத்தம் துணை காவல் கண்காணிப்பாளர் ராமமூர்த்தி தலைமையிலான உதவி ஆய்வாளர்கள் மணிகண்டன் மற்றும் சிலம்பரசன் மற்றும் போலீசார் இன்று ஆந்திர மாநிலம் நெல்லு பட்லா என்ற இடத்தில் தாமோதரனை மீட்டுள்ளனர்.

பணத்திற்காக கடத்தப்பட்ட நபர் ஆந்திராவில் மீட்பு ; கடத்தலில் ஈடுபட்டவர்களில் இருவர் கைது… ஒருவர் தப்பியோட்டம்!!

தாமோதரனை கடத்திய கணேஷ் மற்றும் ராஜ்குமார் இருவரையும் கைது செய்து பரதராமி காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…