கத்தியைக் காட்டி சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் : வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

Author: kavin kumar
23 February 2022, 4:33 pm

புதுச்சேரி : புதுச்சேரியில் சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காகரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

புதுச்சேரி திருபுவனை பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை கடந்த 2018 ஆம் ஆண்டு திருபுவனை பகுதியை சேர்ந்த செப்டிக் டேங்க் தூய்மை செய்யும் தொழிலாளி மணிகண்டன் (30) என்பவர் கத்தியைக் காட்டி கடத்திச் சென்றுள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் திருபுவனை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து மூன்று நாட்களுக்கு பின்னர் சிறுமியை மீட்டு அவரை கடத்தி சென்ற மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தியதில், அவர் சிறுமியை சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்ததை அடுத்து போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பான வழக்கு கடந்த 3.5 ஆண்டுகளாக புதுச்சேரி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று இறுதி வாதங்கள் நடைபெற்றது. அப்போது சிறுமியின் தந்தையைக் கொலை செய்துவிடுவேன் என மணிகண்டன் கூறி சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமி வாக்குமூலம் அளித்ததை அடுத்து தலைமை நீதிபதி செல்வநாதன் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மணிகண்டனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாநில அரசு ரூபாய் 4 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளது.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 1510

    0

    0