பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிறந்து 4 நாட்களே ஆன பெண் குழந்தை கடத்தல் : சிசிடிவி காட்சியில் சிக்கிய மர்மநபர்.. போலீசார் விசாரணை!!
Author: Udayachandran RadhaKrishnan3 July 2022, 2:02 pm
கோவை : பொள்ளாச்சியில் அரசு மருத்துவமனையில் நான்கு நாட்கள் ஆன பிறந்த பெண் குழந்தையை கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் குமரன் நகர் பகுதியை சேர்ந்த யூனிஸ் இவரது மனைவி திவ்யா பாரதியை பிரசவத்துக்கு அனுமதித்திருந்தார்.
கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு திவ்ய பாரதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தொடர் சிகிச்சையில் இருந்த தாயும் சேயும் நலமாக இருந்துள்ளனர்.
நேற்று இரவு பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் குழந்தைகள் பிறருக்கு சென்ற மரபு நம்பர் பிறந்த பெண் குழந்தையை திருடிச் சென்றுள்ளனர்.
குழந்தை காணவில்லை என அதிர்ச்சி அடைந்த யூனிஸ் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் பேரில் பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் திருமதி தமிழ்மணி உத்தரவின் பேரில் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமதாஸ் தலைமையில் போலீசார் அரசு மருத்துவமனை பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,
அரசு மருத்துவமனையில் பிறந்த நான்கு நாட்களாக குழந்தை காணாமல் போனது சம்பவம் அப்பகுதி பரபரப்பாக பேசப்படுகிறது