கூலிப்படையை ஏவி தச்சு தொழிலாளி கடத்தல் : விடுதலை சிறுத்தைகள் கட்சி மகளிர் அணி துணைத்தலைவி கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
8 October 2022, 5:18 pm

கொடுத்த கடனை திருப்பி வாங்க கூலிப்படையை ஏவி தச்சு தொழிலாளியை கடத்திய விசிக மாவட்ட மகளிர் அணி துணை தலைவியை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் அருகே ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்த தச்சு தொழிலாளி ஞானமணியை, சில நாட்களுக்கு முன் சிலர் கடத்தி சென்று தாக்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து காவல்நிலையத்திற்கு வந்த புகாரின் பேரில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய தமிழ் அழகன், வேல்மணி ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி துணைத் தலைவி சுதாவிடம், ஞானமணி ஒன்றரை லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாகவும், அதை திரும்ப வாங்க, அவரும் விசிக ஒன்றிய செயலாளர் ரவியும் கூலிப்படையை அனுப்பியது தெரியவந்தது.

இதையடுத்து சுதாவை கைது செய்த போலீசார், விசிக ஒன்றிய செயலாளர் ரவி உட்பட 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்