கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து தனியார் youtube சேனல் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பபடும் என்று
சட்டப்பேரவையில் பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அடிப்படை வசதிகளை முறையாக செய்யாமல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை அவசர அவசரமாக திறந்ததற்கான காரணம் என்ன..? என்றும், சிறுசிறு பிரச்சனைகள் இருந்து வரும் நிலையில், அதனை சரிசெய்யாமல் திறந்ததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
அவரது இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கும், அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் சிவசங்கர் பதிலளித்தனர். மேலும், முதலமைச்சர் ஸ்டாலினும் இது தொடர்பாக விளக்கம் கொடுத்தார்.
இந்த நிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆய்வு நடத்தினார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் குறித்து பல்வேறு வதந்திகள் உலா வருகின்றன. அதனை தவிர்க்கும் விதமாகவே இன்று ஆய்வு நடத்தப்பட்டது.
சட்டப்பேரவையில் எதிர்கட்சி தலைவர் டப்பாடி பழனிசாமி கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. எந்தப் பிரச்சனையாக இருந்தாலும், அதனை புகாராக கூறினால், அது சரி செய்து தரப்படும். தொடர்ந்து வாரம் ஒருமுறை ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. முகூர்த்த தினம், 2வது சனிக்கிழமை என குறிப்பிட்ட தினங்களை கருத்தில் கொண்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 361 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் 734 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. நாளை காலையில் இருந்து கூடுதலாக 120 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இனி வதந்திகளை பரப்ப வேண்டிய தேவையில்லை.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து தனியார் youtube சேனல் ஒன்று தான் இந்த பிரச்சனைக்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. வதந்தி பரப்புவதற்காக திட்டமிட்டு செய்யப்பட்ட செயலாக இது உள்ளது. வதந்தி பரப்பிய அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும், எனக் கூறினார்.
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…
வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…
கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…
எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
This website uses cookies.