மக்களுக்கு பயனற்றதா கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்? குவியும் புகார்களுக்கு முற்றுப்புள்ளி : அமைச்சர் சேகர்பாபு தகவல்!

Author: Udayachandran RadhaKrishnan
2 January 2024, 10:00 pm

மக்களுக்கு பயனற்றதா கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்? குவியும் புகார்களுக்கு முற்றுப்புள்ளி : அமைச்சர் சேகர்பாபு தகவல்!

மாணவ மாணவியர்களுக்கான கலைஞர் நூற்றாண்டு விழா போட்டிகள் பரிசளிப்பு விழா கீழ்பாக்கத்தில் உள்ள ,காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பெற்றது , இதில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்,

பின்னர் செய்தியாளுக்கு பேட்டி அளித்த அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், கலைஞர் நூற்றாண்டு முன்னிட்டு அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் பல்வேறு போட்டிகள் நடத்தி வருகிறோம், முதலமைச்சர் வழிகாட்டுதலின் படி ஏகாம்பரநாதர் திருக்கோவிலின் பள்ளியான ஏகாம்பரேஸ்வரர் பள்ளியில் மற்றும் கபாலீஸ்வரர் திருக்கோவிலில் சார்பில் கபாலீஸ்வரர் கல்லூரியிலும் இன்றைக்கு 1900 கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற விளையாட்டுப் போட்டிகள் கட்டுரை போட்டிகள் கவிதை போட்டிகள் ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற 109 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

திருக்கோவில் சார்பில் நடத்தப்பட்டும் பயிற்சி பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை 3000 இருந்து 4000 ஆக மற்றும் பகுதி நேர மாணவர்களுக்கு 1500 இருந்து 2000 மாக கலைஞர் நூற்றாண்டு முன்னிட்டு உயர்த்தப்பட்டது , இதனால் மாதம்தோறும் 292 பேர் பயனடைகிறார்கள்.

இந்து சமய அறநிலையத்துறை பொறுத்தவரை பள்ளிகள் என்பது ஒட்டுமொத்தமாக 11360 மாணவர்கள் பயின்று கொண்டு வருகின்றனர். 10 கல்லூரிகளில் 13281 மாணவர்கள் பயின்று வருகின்றனர் ஒட்டுமொத்தமாக 24560 மாணவர்கள் இந்த சமைய அறநிலையத்துறை சார்பில் பயின்று வருகின்றனர்.

2022 ஆம் ஆண்டு இந்த பள்ளியை இந்து சமய அறநிலையத்துறை எடுத்து நடத்த முடிவெடுத்து ,750 மாணவர்கள் பயின்று வரும் இந்த பள்ளி இன்றைய தினம் 1153 மாணவர்கள் பயின்று வருகின்றனர், வருகின்ற ஆண்டில் மேலும் இந்த எண்ணிக்கை உயரும் என நம்புகிறோம் , 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கொண்டு கூடுதல் வகுப்பறைகள் அமைக்க நடவடிக்க எடுக்கப்பட்டுள்ளது , திமுக ஆட்சி ஏற்பட்ட பிறகு பள்ளிகளில் மொத்தமாக 92 பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது 37 கோடியே 13 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தற்போது 24 பணிகள் முடிவுற்றது.

8 திருக்கோவில்களில் 92 ஆயிரம் நபர்கள் உணவு உண்ணும் வகையில் 100 கோடி ரூபாய் ஆண்டுக்கு செலவளித்து முதலமைச்சர் இறைநம்பிக்கை கொண்டவர்களுக்கு வயிற்று பசியினை தீர்த்தார்.

ஒருவேளை அன்னதானம் திட்டத்தின் படி 754 திருக்கோவில்களில் இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு கூடுதலாக 10 திருக்கோவில்களில் மற்றும் இந்த ஆண்டு மானிய கோரிக்கைக்கு பிறகு கூடுதலாக 7 திருக்கோவில் இணைக்கப்பட்டு ஆண்டுக்கு 25 கோடி ரூபாய்க்கு திருக்கோவில்களில் செலவிடப்படுகிறது.

இதுவரை ஒன்றிய அரசின் 524 பேருக்கு சான்றிதழ் தமிழ்நாட்டின் சார்பில் திருக்கோவில்கள் பெற்றுள்ளது , இந்தியாவிலேயே தமிழகம் தான் அதிக சான்றிதழ்கள் பெற்றுள்ளது

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அன்னதானத்தின் தரத்தை பரிசோதிக்க தனியார் நிறுவனத்திற்கு ஒப்புதல் அளித்து வருடத்திற்கு 4 முறை சோதனை நடத்தி வருகிறோம்.

கிலாம்பக்கம் பேருந்து நிலையம் மாற்று திறனாளிகள் தேவைகள் பொறுத்தவரை 5 பேட்டரி கார்கள் இயக்கப்படுகிறது , எம் டி சி பேருந்துகள் 7 ஏக்கர் நிலப்பரப்பில் 60 பேருந்துகள் நிற்பதற்கு வாதிகள் உள்ளது , அதை ஒட்டியே மின்துக்கிகள் உள்ளது.

நேற்று விடுமுறை முடிந்து பொதுமக்கள் 10000 க்கும் மேற்பட்ட நபர்கள் வீடு திரும்புவதை கணித்து பேட்டரி கார்கள் கூடுதலாக இயக்குவதற்கு மாற்றுத்திறனாளிகளின் உதவிக்கு பணியாளர்கள் நியமிப்பதற்கு பணியானை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துவதற்கு நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது

கடந்த காலத்தில் திட்டமிடாமல் செயல்படுத்தப்பட்ட திட்டம் என்றாலும் 50 க்கும் மேற்பட்ட ஆய்வு கூட்டங்கள் பொதுப்பணி துறை , தேசிய நெடுஞ்சாலை , தீயணைப்பு, காவல் துறை , சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஒன்றிணைத்து ஆய்வு செய்ததால் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆட்சியில் இந்த திட்டம் நடைபெற்றது இல்லையெனில் இந்த திட்டம் வெறும் வாய் பேச்சாக மட்டுமே இருந்திருக்க கூடும்.

பயணிகளின் முழுமையான தேவைகள் நிறைவு செய்வோம். பொங்கலுக்கு பிறகு இந்த மாத இறுதிக்குள் கிலம்பாக்கத்தில் மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட உள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆம்னி பேருந்து 840 , எஸ் இ டி சி 360 பேருந்துகள் , டி என் எஸ் சி டி சி 1010 பேருந்துகள் முழுமையாக கிலம்பாகம் பேருந்து நிலையத்தில் இயங்கும் , ஒரு நாளுக்கு 1 லட்சம் அளவில் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது , கூடுதலாக தேவையான அனைத்தும் குறிக்கப்படுகிறது அது மிக விரைவாக முடிவு பெரும்.

கோயம்பேடு பேருந்து நிலையம் பொறுத்தவரை 30சதவீதம் பேருந்துகள் ,ஒரு வருட காலத்திற்கு பெங்களூர் போன்ற வெளி மாநிலங்களுக்கு இயங்க உள்ளது அதற்குப் பிறகு கோயம்பேடு பேருந்து நிலையம் இருக்கும் இடத்தில் மிகப்பெரிய திட்டம் கொண்டு வர உள்ளது அதற்கான கருத்துருக்கள் முடிவு பெற்ற பிறகு அதற்கான செயல்பாடுகள் தொடங்கும்

சென்னையில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலுக்கான தீர்வினை ஏற்படுத்த பல்வேறு திட்டங்களை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.

கோயம்பேடு பேருந்து நிலையம் ஒட்டி இருக்கும் 16 ஏக்கர் நிலத்தினை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மக்களின் பயன்பாட்டுக்கு எது சிறந்ததோ அதை கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

கிலம்பாக்கம் பொறுத்தவரை 86 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது, 6லட்சத்து 50 ஆயிரம் சதுரடிக்கு கட்டுமானம் நடைபெற்று வருகிறது. இந்த பேருந்து நிலையத்திற்கு பல்வேறு தேவைகள் இருந்தாலும் உரிய திட்டங்கள் செய்யப்படவில்லை,

சிறிய மழை பொழிந்தாலே பெரிய அளவில் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டிருந்தது அதை போக்குவதற்காக 13 கோடி ரூபாய் செலவில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது, மழை நீர் முழுமையாக வடிவதற்ககு கிளம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு எதிராக உள்ள ரயில்வே புதிதாக கட்ட வேண்டும் என தென்னக ரயில்வே துறையிடம் கூறிய பொழுது அதற்கு 16 கோடி ரூபாய் இரு தரப்பும் பாதியாக பிரித்து அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

காவல் நிலையம் கிலாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு அருகாமையில் 13 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட உள்ளது, மேலும் 6 ஏக்கர் நிலப்பரப்பில் பயணிகளுக்கு அழகான ஒரு பூங்காவை கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

50 ஆண்டுகளை கணக்கிட்டு அந்த வழியாக செல்லும் ரயில்கள் அங்கு நிற்க வேண்டும் என கிளாம்பாக்கம் ரயில்வே நிலையம் அமைக்க சென்னை மாநகர வளர்ச்சி குழுமத்திற்கு 20 கோடி ரூபாய் வழங்கியுள்ளார்.

நிரந்தரமாக ஒரு நடைமேடை, ஸ்கை வாக் அமைப்பதற்கு 140 கோடி ரூபாய் செலவில் திட்டமிடப்பட்டுள்ளது, 50 ஆண்டுகளுக்கு பொதுமக்களுக்கு தேவையான திட்டங்களை சென்னை மாநகர வளர்ச்சி குழுமம் அமைத்துள்ளது.

மக்களின் பயன்பாட்டுக்கு வந்த பிறகு தான் கிளம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு என்ன தேவை என்று தெரியவரும் , நிச்சயமாக உலக தரம் அளவில் இந்த கிளம்பாக்கம பேருந்து நிலையம் , அனைத்து பொது மக்களின் தேவைகளும் பூர்த்தி அடையும் வகையில் இந்த பேருந்து நிலையம் இயங்கும் என்றார்.

  • Vijay Deverakonda and Rashmika Mandanna relationship ராஷ்மிகா போட்ட கண்டிஷன்..திருமணத்தை உதறிய விஜய் தேவரகொண்டா..!
  • Views: - 1681

    0

    0