கோழியை பிடிக்க வைத்த கூண்டில் சிக்கி சிறுத்தை பலி: வனத்துறையினர் தீவிர விசாரணை!!

Author: Rajesh
12 May 2022, 1:36 pm

கோவை: வால்பாறையில் கோழியை பிடிக்க வந்து கூண்டில் சிக்கிய சிறுத்தை பரிதாபமாக இறந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனக்கோட்டம் வால்பாறை வனச்சரகத்திற்குட்பட்ட பழைய வால்பாறை வரட்டுப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் உஸ்மான். இவரது வீட்டிற்கு பின்புறம் கோழிகளை அடைத்து வைப்பதற்காக பெரிய கூண்டு ஒன்றும் உள்ளது.

இதில் அதிகாலையில் ஆண் சிறுத்தை ஒன்று முன்பகுதி இடது கால் நகங்கள் கூண்டில் மாட்டிய நிலையில் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தேசிய புலிகள் பாதுகாப்பு
ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி, வால்பாறை வனச்சரக அலுவலரால் சிறுத்தை இறப்பு குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வனக்கால்நடை மருத்துவர் உடற்கூறு ஆய்வும் செய்யப்பட்டது. மர்மமான முறையில் சிறுத்தை இறந்தது தொடர்பாக வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • age gap between priyanka deshpande and her husband vj vasi இவ்வளவு வயசு வித்தியாசமா? விஜய் டிவி பிரியங்காவின் இரண்டாவது கணவர் இப்படிபட்டவரா?