விஷம் வைத்து ஆடுகள் கொலை : நீதி கிடைக்காமல் அலையும் விவசாயி… ஒலிப்பெருக்கியுடன் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
22 ஆகஸ்ட் 2022, 12:39 மணி
Farmer - Updatenews360
Quick Share

ஆட்டை விஷம் வைத்து கொன்றதற்கு இது வரை நீதி கிடைக்கவில்லை- ஒலிப்பெருக்கியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுப்பட்ட நபரால் பரபரப்பு.

கோவை வேடபட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன். கடந்த 2019ம் ஆண்டு இவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும் மூன்று பேர் (செந்தில், பாண்டியன், பழனிச்சாமி) இவர் வளர்த்து வந்த ஐந்து ஆடுகளை விஷம் வைத்துக் கொன்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வடவள்ளி காவல் நிலையம் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்த போதிலும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒலிபெருக்கியுடன் தர்ணாவில் ஈடுபட்டார்.

உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவரிடம் இருந்த ஒலிபெருக்கியை பறிமுதல் செய்தனர். அப்பொழுது அவர் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் மனு அளிக்க காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.

ஒலிபெருக்கியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட நபரால் சிறிது நேரம் பதட்டமான சூழல் நிலவியது.

  • Woman Aghori ஒட்டுத் துணியில்லாமல் கோவிலுக்குள் நுழைந்த பெண் அகோரி… அனுமதி மறுப்பால் தீக்குளிக்க முயற்சி!
  • Views: - 432

    0

    0